வாட்ஸ் அப் செயலியில் நாம் பலரும் வீடியோ அழைப்புகள் அல்லது குரல் அழைப்புகளை செய்துகொண்டு வருகிறோம். அதற்கு நாம் செயலியை திறந்து அதன் பிறகு அழைக்கவேண்டிய நபரை தேடி அழைப்பை மேற்கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக புதியதாய் ஒரு வசதியை கொண்டு வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். ” Call links for Whatsapp Calls ” என்ற இந்த வசதியின் மூலம், நமக்கு அழைப்புகளை மேற்கொள்ள லிங்க் உருவாக்கிக் கொள்ளலாம்.
Call links for Whatsapp Calls
உங்கள் வாட்ஸ் அப் செயலியில் ” Calls ” என்ற பகுதிக்கு செல்லவும். அங்கே கீழே கண்டவாறு மெசேஜ் இருந்தால் நீங்கள் கால் லிங்க்ஸ் உருவாக்க முடியும் என்று அர்த்தம் . அப்படி இல்லையென்றால் இன்னும் வசதி உங்களுக்கு வரவில்லை அல்லது நீங்கள் வாட்ஸ் அப் பீட்டா உபயோகிக்கவில்லை என்று அர்த்தம்.
” Create Call Link ” என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அடுத்து எந்த வகையான அழைப்பை மேற்கொள்ளலாம் எனக் காட்டும் (video / Voice). அந்த ஸ்க்ரீனிலேயே அந்த லிங்கை பகிருவதற்கு வசதிகள் உள்ளது. இந்த லிங்கை நீங்கள் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால், அதன் பின் உங்களை அழைக்க அவர்கள் இந்த லிங்கை க்ளிக் செய்தால் போதுமானது. இந்த வசதி இன்னும் அனைத்து பயனாளர்களுக்கும் வரவில்லை. இப்பொழுது வாட்ஸ் அப் பீட்டா செயலி உபயோகிப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி வந்துள்ளது. இதன் ஸ்க்ரீன் ஷாட்