அடுத்தவங்க என்ன நினைப்பாங்க

அடுத்தவங்க என்ன நினைப்பாங்க?

This entry is part 10 of 10 in the series வாழ்வியல்

வெற்றியாளர்கள் பலர் அவங்க வெற்றிக்கு முக்கிய காரணமாக சொல்ற விஷயமே ” அடுத்தவங்க என்ன நினைப்பாங்க அப்படீங்கற நினைப்பு  எங்க  மனசுல எப்பவுமே  வராது” அப்படீன்னு தான்.

இன்னிக்கு வெளியில் கிளம்பும்போது கருப்பு கலர் பேண்ட்டுக்கு க்ரீன் கலர் டி ஷர்ட், இல்லேன்னா யெல்லோ  சுடிக்கு ஒரு ரெட் கலர் துப்பட்டாவோ போட்டுட்டு போனா யாராவது கேலியாக ஏதாவது சொல்லுவாங்களோ அப்படீன்னு ஒரு நினைப்பு!  உண்மையிலே அந்த ‘யாராவது’  உங்களை பார்த்து ஆச்சரியப்படலாம்!. 

 ” அட!  இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே!  நான்  கூட டிரை பண்ணலாமே” அப்படீன்னு அவங்களுக்கு தோணலாம். டிரெஸ் மட்டுமில்ல.  நீங்க நாலு பேர் சேர்ந்து பேசற  இடத்திலேயோ இல்லை வீட்டிலேயோ உங்க கருத்து என்ன அப்படீன்னு   தைரியமா சொல்லுங்க!  அவங்கவங்களுக்கு, அவங்கவங்க கருத்து  சூப்பர் தான்!

ஒவ்வொரு நாளும் ஒரு ஐந்து நிமிடம் கண்ணாடி முன்னாலே நின்று உங்க பெஸ்ட் க்வாலிடீஸ் என்னென்ன அப்படீன்னு உங்களை பார்த்து சொல்லிட்டே ஒரு லிஸ்ட் போடுங்க!  அந்த சந்தோஷம் தரும் தன்னம்பிக்கை இருக்கு பாருங்க, அது தான் வெற்றிக்கு பக்கத்திலே உங்களை செலுத்தும் விஷயம்.

அப்படி லிஸ்ட் போடும்  போது  உங்களை ஊக்குவிப்பது போல் உங்களுக்கு நீங்களே ஒரு pep talk  குடுங்க!

“நீ ஜெயிக்கிற இலக்குக்கு ரொம்ப பக்கத்துல வந்துட்டே!”நீ சூப்பரா ஜெயிக்கப்போறே”

கொஞ்சம் யோசி! போன ப்ராஜெக்ட்ல எவ்வளவு பிரமாதமா நீ ஜெயிச்சே? இத்தனைக்கும் இந்த ப்ராஜெக்டைவிட அது கஷ்டம்!.  அதுவே முடிந்தது அப்படீன்னா… இதையெல்லாம் ஈஸியாக ஊதி தள்ளிடுவே!”

கிரிஸ்டஃபர் ராபின்  என்ற மேலை நாட்டு வெற்றியாளர் என்ன சொல்கிறார் தெரியுமா? ” அடுத்தவங்க விமரிசனத்திற்கு பயந்து நீங்க மூலையில் முடங்கினால் பிறகு  வெற்றிப்படிக்கட்டிற்கு அருகில் போவது எப்படி?”.

Series Navigation<< அடுத்தவங்களை விமர்சிக்காதீங்க!

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.