Fake Windows Installer

விண்டோஸ் 11 dev channel இல் வெளிவந்து சில வாரங்கள் ஆகின்றன. ஆனால் இன்னும் பீட்டா பதிப்போ இல்லை அனைவருக்குமான பொது வெளியீடோ அறிவிக்கக் கூடப்படவில்லை. முதலில் பீட்டா பதிப்பு வரும். இதுவும் ஏற்கனவே விண்டோஸ் இன்சைடர் ப்ரோக்ராமில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே. அதன் பின் சில வாரங்களில் அனைவருக்குமான பதிப்பு வெளியாகும். அதே போல் இது வரை விண்டோஸ் 11 தனியாக இன்ஸ்டால் செய்ய எந்த டூலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினால் வெளியிடப்படவில்லை. ஆனால் இணையத்தில் பல இடங்களில் Fake Windows Installer கிடைக்கிறது. இதை யாரும் டவுன்லோட் செய்யக் கூடாது.

ஆனால் பலரும் இந்த போலி இன்ஸ்டாலரை டவுன்லோட் செய்கின்றனர். அது இன்ஸ்டால் ஆகும் பொழுது கவனித்தால் இரண்டு கோப்புகளை டவுன்லோட் செய்யும். ஒன்று விண்டோஸ் 11 போன்று ஏதோ ஒரு பைல். இரண்டாவது “Download Manager”. இந்த டவுன்லோட் மேனேஜர்தான் வில்லங்கமான பைல்.

இது உங்கள் கணிணியில் உங்கள் அனுமதி இல்லாமல் மால் வேறோ அல்லது ட்ரோஜனையோ இன்ஸ்டால் செய்துவிடும். இதை விட கொடுமையான விஷயம் ஆட் வேர். இந்த ஆட் வேர் (Adware ) இன்ஸ்டால் ஆகி விட்டால், உங்கள் கணிணி முழுவதும் வரிசையாக விளம்பரமாய் குவியும். அடுத்து உங்கள் கணிணி மெதுவாக வேலை செய்யும்.

முக்கியமான விஷயம்

உங்கள் கணிணியில் விண்டோஸ் 11 வேலை செய்யாது என மைக்ரோசாஃப்ட் சொல்லி இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளவும். இன்னும் 4 வருடம் விண்டோஸ் 10க்கு சப்போர்ட் தருவோம் என சொல்ல இருக்கிறார்கள். அதை தவிர்த்து இம்மாதிரி Fake Windows Installer பைல்களை தரவிறக்கி பிரச்சனையில் சிக்க வேண்டாம்.

இந்த போலிகளில் ஒன்று 86307_windows 11 build 21996.1 x64 + activator.exe என்ற பெயரில் உள்ளது. கிட்டத்தட்ட 1.75 ஜிபி சைஸ் வரும். இந்த பெயரில் மட்டுமல்லாது இன்னும் பல பெயர்களில் இதே பைல் சுத்துகிறது. மைக்ரோசாஃப்ட் இது வரை விண்டோஸ் 11 தனிப்பட்ட ஐ எஸ் ஓ பைலையோ அல்லது இன்ஸ்டாலரையோ அறிவிக்கவில்லை. இப்பொழுதுவரை விண்டோஸ் 11 இன்ஸ்டால் செய்ய ஒரே வழி நீங்கள் இன்சைடர் ப்ரோக்ராமில் dev channel இல் பதிவு செய்திருந்தால் மட்டுமே.

இது சம்பந்தமாய் சில படங்கள்

Fake Windows Installer
PC:https://www.kaspersky.com/
Fake Windows Installer
PC:https://www.kaspersky.com/

இப்பொழுது இவர்கள் விண்டோஸ் 11க்கான தேவைகளை சொல்லி இருப்பதில் இருந்து சில மாற்றங்கள் வரலாம் என்றுதான் அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றும். அதே போல் , விண்டோஸ் 11 , ஏற்கனவே விண்டோஸ் 10 உபயோகிப்பவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.

போலி இன்ஸ்டாலர்களை டவுன்லோட் செய்ய வேண்டாம்.

இது சம்பந்தமாக காஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் பதிவு

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.