Google Play Pass

Google Play pass available in India now

போன மாத இறுதியில் நாம் எழுதியிருந்த படி, இந்தியாவில் இப்பொழுது Google Play pass அப்டேட் வந்துவிட்டது. இப்பொழுது நீங்கள் உங்கள் மொபைலில் செக் செய்து பார்த்தல் கூகிள் ப்ளே பாஸ் ஆப்ஷன் காட்டும். அதற்கு முன்பு இதனால் என்ன பயன் என்று ஒரு முறை பார்ப்போம்.

இப்பொழுது “Google Play Pass” சேவையில் 1000க்கும் மேற்பட்ட செயலிகள் உள்ளன. இதில் உள்ள சில முக்கிய பிரபலமான செயலிகள் Monument Valley, World Cricket Battle 2, etc, along with other helpful apps like Utter, Unit Converter, AudioLab, Photo Studio Pro. இந்த கட்டண சேவையின் முக்கிய நோக்கமே, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நீங்கள் பல ப்ரீமியம் செயலிகளை இலவசமாக பயன்படுத்தலாம். அந்த செயலியின் உள்ளே இருக்கும் வசதிகளை உபயோகிக்க தனியாக வேறு இந்தக் கட்டணமும் தேவையில்லை. நீங்கள் ஒவ்வொரு மாதமும் கூகிள் ப்ளே சேவைக்கு கட்டும் கட்டணமே போதுமானது.

  1. உங்கள் மொபைலில் இருந்து கூகிள் ப்ளே ஸ்டோர் செல்லவும்
  2. அங்கு வலது மேல் மூலையில் உங்கள் ப்ரொபைல் ஐக்கான் இருக்கும். அதை டேப் செய்யவும்
  3. அங்கே “play Pass” என்ற ஆப்ஷன் வரும்.
  4. அதை டச் செய்தால், அடுத்து இதில் உள்ள திட்டங்களை காட்டும்.
  5. அதற்கடுத்து உங்கள் பேமெண்ட் முறையை தேர்வு செய்யவும்.

இங்கு ஒரு சிக்கல் உள்ளது. அதாவது உங்கள் வங்கி தானாக ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கும் வசதியை சப்போர்ட் செய்யவேண்டும். அப்பொழுது மட்டுமே நீங்கள் கூகிள் ப்ளே சேவையில் இணைய முடியும். என் வங்கி இதை சப்போர்ட் செய்யவில்லை. எனவே என்னால் இணைய இயலவில்லை

ஸ்க்ரீன் ஷாட்

Google Play Pass
Google Play Pass

About Author