Google Play Pass

Google Play Pass rolling out in India this week

ஆண்டிராய்டு செயலிகள் பெரும்பாலானவை இலவசம் என்றாலும், பல செயலிகளில் அவர்கள் வருமானம் ஈட்டுவதற்காக விளம்பரங்கள் வரும். அதே போல், செயலிகளில் சில குறிப்பிட்ட சேவைகளை பெற நீங்கள் பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். செயலிகளில் வரும் விளம்பரங்களை தவிர்க்க வேண்டுமா, சில ப்ரீமியம் செயலி சேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டுமா இதற்காகத்தான் கூகிள் “Google Play Pass” என்ற கட்டண சேவையை இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இப்பொழுது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த சேவை உள்ளது. இந்தியாவில் இந்த கூகுளை ப்ளே பாஸ் சேவையை இந்த வாரம் அறிமுகப்படுத்துகிறது.

இப்பொழுது “Google Play Pass” சேவையில் 1000க்கும் மேற்பட்ட செயலிகள் உள்ளன. இதில் உள்ள சில முக்கிய பிரபலமான செயலிகள் Monument Valley, World Cricket Battle 2, etc, along with other helpful apps like Utter, Unit Converter, AudioLab, Photo Studio Pro.

Google Play Pass prices

இந்த கூகிள் ப்ளே பாஸ் சேவை முதல் மாதம் இலவசமாகவும் அதன் பின் மாதம் ரூ.99 க்கோ இல்லை வருடம் ரூ.889க்கோ பெறலாம். இல்லையென்றால் ரூ.109 ப்ரீ பெயிட் சேவையை பெறலாம். இன்று துவங்கி இந்த வாரத்தில் இந்திய உபயோகிப்பாளர்களுக்கு இந்த சேவை கிடைக்கும் என்று தெரிகிறது. உங்கள் மொபைலில் இந்த சேவை உண்டா என்பதை அறிய

  1. உங்கள் மொபைலில் இருந்து கூகிள் ப்ளே ஸ்டோர் செல்லவும்
  2. அங்கு வலது மேல் மூலையில் உங்கள் ப்ரொபைல் ஐக்கான் இருக்கும். அதை டேப் செய்யவும்
  3. அங்கே “play Pass” என்ற ஆப்ஷன் வரும்.

அங்கு ஆப்ஷன் வரவில்லை என்றால் காத்திருக்கவும். இந்த வார இறுதிக்குள் அனைவருக்கும் கிடைக்கும்.

கூகிள் சப்போர்ட் பக்கத்தின் படி

  • Use a device with Android version 4.4 and above. 
  • Have Google Play Store app version 16.6.25 and above.
  • Be located in a country where Play Pass is available.
  • Have a valid payment method.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.