Google Search Dark mode

Google Search gets dark mode in PC

சமீபகாலமாய் அதிகம் பேர் விரும்பும் ஒரு விஷயம் இந்த டார்க் மோட். பெரும்பாலான செயலிகளில் இன்று இந்த டார்க் மோட் வசதி உள்ளது. கூகிள் க்ரோம் ஆகட்டும் அல்லது கூகிள் சர்ச் ஆகட்டும் இந்த இரண்டின் மொபைல் செயலிகளில் இந்த டார்க் மோட் ஏற்கனவே வந்துவிட்டது. ஆனால் கணிணியில் கூகிள் சர்ச் எஞ்சினுக்கு இப்பொழுதுதான் இந்த dark mode வந்துள்ளது. எப்படி உங்கள் கணிணியில் கூகிள் சர்ச் ஐ டார்க் மோடில் மாற்றுவது என பார்ப்போம்.

  1. உங்கள் கணிணியில் “google.com” செல்லவும்.
  2. அதில் வலது கீழ் பக்கம் அல்லது மேல் பக்கம் இருக்கும் “settings” ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  3. இப்பொழுது “Appearance ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  4. அதில் கீழே உள்ள மூன்று ஆப்ஷன்களில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யவும்
  • Device default
  • Dark theme
  • Light theme
dark mode in PC
Pc:https://9to5google.com/

Device Default – உங்கள் கணிணி என்ன செட்டிங்ஸ் உபயோகிக்கிறதோ அதே செட்டிங்ஸ்

Dark Theme – எப்பவுமே டார்க் மோட்

Light Theme – எப்பவுமே நார்மல் மோட்

இந்த அப்டேட் அனைத்து கணிணிகளுக்கும் இன்னும் வரவில்லை. எனவே “appearance “ஆப்ஷன் இல்லையென்று தேடவேண்டாம். சிறிது காலம் பொறுத்தால் அப்டேட் வரும். ( எனக்கும் இன்னும் இந்த அப்டேட் வரவில்லை 🙂 )

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.