சமீப காலமாய் பலரை பிடித்து ஆட்டும் சமீபத்திய பித்து “க்ரிப்டோ கரன்சி”. குறுகிய காலத்தில் குறைவான முதலீட்டில் அதிக லாபம் அடையலாம் என்ற எண்ணத்துடன் பலரும் க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்கின்றனர். இவர்களின் பேராசையை முதலீடாக கொண்டு இவர்களின் தகவல்கள் / பணம் திருட மற்றொரு கும்பல் உள்ளது. இவர்களின் தயாரிப்புதான் போலி Cryptocurrency mining Apps. சிறிய முதலீட்டில் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்படும் பயனாளர்கள் பணத்தையும் இழந்து தங்கள் மொபைலில் உள்ள தனிப்பட்ட தகவல்களையும் இழந்து விடுகின்றனர்.
![Cryptocurrency mining Apps](https://tech4india.in/tamil/wp-content/uploads/sites/2/2021/09/Daily-Bitcoin-Rewards-–-Cloud-Based-Mining-System-300x147.jpg)
சமீபத்தில் மொபைல் பாதுகாப்பு நிறுவனங்களால் கண்டறியப்பட்டு கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட போலி Cryptocurrency mining Appsஇல் ஒன்று “Daily Bitcoin Rewards – Cloud Based Mining System”. இந்த செயலியினால் வரும் பிரச்சனைகள்
- சிறிய முதலீட்டுக்கு அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் போட்ட பணமும் வராது லாபமும் கிடைக்காது
- உங்கள் மொபைலில் விளம்பரங்கள் தானாக வரத் துவங்கும்
- சப்ஸ்க்ரிப்ஷன் சர்வீஸ்க்கு உங்கள் விவரங்களை திருடி சப்ஸ்க்ரைப் பண்ணிவிடும். மொபைல் / க்ரெடிட் கார்ட் பில் வரும் பொழுதுதான் உங்களுக்கு தெரியவரும்.
இந்த மாதிரி செயலிகளில் இருந்து உங்களை காத்துக் கொள்ள
- ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டுமே செயலிகளை இன்ஸ்டால் செய்யவும்
- ப்ளே ஸ்டோரில் செயலியை பற்றிய விவரங்களை படிக்கவும்
- சில சமயம் இத்தகைய போலி செயலிகளில் இலக்கண பிழை / எழுத்துப் பிழை இருக்கும். அதன் மூலமும் போலி என்பதை உணரலாம்.
- கூகிளில் அந்த செயலியை பற்றி தேடி படிக்கவும்.