Whatsapp Channels

Introducing Whatsapp Channels

டெலிகிராம் செயலியில் இருந்து வாட்ஸ் அப் கொண்டு வந்திருக்கும் மற்றுமொரு விஷயம் ” Whatsapp Channels “. இந்த மாத துவக்கத்தில் இதை பற்றி தங்களது அதிகாரபூர்வ வலைத்தளத்தில் அறிவித்திருந்தது வாட்ஸ் அப் நிறுவனம். இப்பொழுது சிங்கப்பூர் மற்றும் கொலம்பியாவில் இருக்கும் பீட்டா பயன்பாட்டாளர்கள் மட்டுமே சேனல் உருவாக்க இயலும் என்று சொல்லி உள்ளனர். மேற்கொண்டு சோதனைகள் முடிந்தப்பின் மற்ற நாடுகளுக்கு இந்த வசதி வரும்.

Whatsapp Channels Features

இப்பொழுது இருக்கும் வசதிகள்

  1. Whatsapp Channels யார் வேண்டுமானாலும் தேடி கண்டுபிடிக்க இயலும் .
  2. இப்பொழுது வரை எத்தனை பேர் சேனலில் சேர இயலும் என்ற கட்டுப்பாடு இல்லை. பின்பு கொண்டுவரப்படலாம்.
  3. உங்கள் பெயரோ அலைபேசி எண்ணோ மற்றவருக்கு காட்டாது . உங்கள் சேனல் பெயர் மட்டுமே காட்டும்.
  4. புதிதாய் பெறுபவர் அதற்கு முந்தைய 30 நாட்களில் சேனலில் பகிரப்பட்ட தகவல்களை பார்க்க இயலும்.
  5. அதேபோல் சேனலில் பெறுபவர் எண்ணும் யாருக்கும் காட்டாது என சொல்லி உள்ளனர்.

கீழே உள்ள படம் அவர்கள் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இதுவரை இந்தியாவில் பீட்டா பதிவு உபயோகிப்பவர்களுக்கு சேனல் உருவாக்கும் வசதி வரவில்லை எனவே அது சம்பந்தமான ஸ்க்ரீன்ஷாட் எடுக்க இயலவில்லை.

Whatsapp channels

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.