புதிது புதிதாய் ஏமாற்றுபவர்கள் தினமும் முளைத்துக்கொண்டே உள்ளனர். ஏமாறுபவர்கள் இருக்கும்வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார் என்றாலும் அனைவரையும் எச்சரிப்பது நமது கடமை. இப்பொழுது புதிதாய் வந்திருப்பது “Lottery Scam via Whatsapp”
எப்படி நடக்கிறது ?
SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அழைப்பு விடுத்து உங்களுக்கு லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாக கூறி SBI நம்பர் என சொல்லி குறிப்பிட்ட எண்ணை அழைக்க சொல்கின்றனர். அதற்கு மேல் வழக்கம்போல் ஏமாற்றிவிடுகின்றனர்.
இது போல் எந்தவிதமான லாட்டரி திட்டமும் இல்லை. எனவே இதை “Lottery Scam via Whatsapp” நம்ப வேண்டாம் என SBI அறிவுறுத்தியுள்ளது.