பேஸ்புக் மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் உபயோகம் செய்பவர்களுக்கு இந்த வசதி ஏற்கனவே அறிமுகமான ஒன்று. உங்களுடன் மறுமுனையில் சாட் செய்பவர் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜுக்கும் தனித்தனியாக நீங்கள் ரியாக்ட் செய்ய முடியும். அதாவது ஒவ்வொரு மெசேஜுக்கும் லைக், ஹார்ட்டின் அல்லது வேற ஒரு எமோஜி மூலம் ரியாக்ஷன் செய்யலாம். இந்த “Message reaction” வசதி விரைவில் வாட்ஸ் அப் செயலியிலும் வர உள்ளது. “Message reaction in Whatsapp” சோதனையில் இருப்பதை wabetainfo இணையத்தளம் உறுதி செய்துள்ளது.
மேலே உள்ள ஸ்க்ரீன்ஷாட் ஆன்ட்ராய்ட் மொபைலுக்கான வாட்ஸ் அப் செயலியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் நிறுவனம் இந்த வசதியை சோதித்து வருவது உறுதியாகிறது. மேலும், உங்களிடம் வாட்ஸ் அப்பின் அப்டேட் செய்யப்பட்ட பதிப்பு இல்லையெனில் இந்த வசதியை உபயோகிக்க இயலாது.நீங்கள் பழைய வெர்ஷன் உபயோகம் செய்பவராக இருந்தால் உங்க மெசேஜுக்கு என்ன ரியாக்ஷன் வந்துள்ளது எனக் காண இயலாது. அதற்கு பதிலாக மேலே உள்ள ஸ்க்ரீன்ஷாட்டில் இருப்பது போல மெசேஜ் வரும்.
இன்னும் இந்த வசதி பீட்டா பதிப்பிற்கும் வரவில்லை. பீட்டா பதிப்புக்கு இந்த வசதி வந்து சில நாட்களில் அனைவருக்குமான பொது வெளியீடு இருக்கும்.