MIUI 12.5 Launched

சீன நிறுவனமான Xiamoi நேற்று அதன் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் உபயோகப்படுத்தப்படும் MIUI இயங்குதளத்தின் புதிய பதிப்பை வெளியிட்டது. இது அதன் மொபைல்களுக்கென்று வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் பதிப்பு. இப்பொழுது அதன் லேட்டஸ்ட் மொபைல்களில் MIUI 12 இயங்கி வருகிறது. அடுத்து MIUI 13 எதிர்பார்த்த நிலையில் 12.5 வந்திருக்கிறது. இது ஏப்ரல் முதல் மொபைகளுக்கு OTA அப்டேட்டாக அனுப்பப்படும்.

இதன் முக்கிய அம்சங்கள்

  1. புதிய Dynamic Wallpaper
  2. Note செயலியின் ஐகான் மாறியுள்ளது. மேலும் அதன் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளது
  3. புதிய இயற்கை சப்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன
  4. gesture control மேம்படுத்தப்பட்டுள்ளது
  5. MIUI+ இது உங்கள் xiamoi மொபைலை விண்டோஸ் கணிணியில் பார்க்க உதவும். உங்கள் மொபைல் நோட்டிபிகேஷன் பிறகு சில செயலிகளை கணிணியில் இருந்து கண்ட்ரோல் செய்யலாம். இது முதலில் சில மாடல்களில் மட்டும் வேலை செய்யும். (Mi 10 Ultra, Mi 10 Pro, Mi 10, Mi 9 Pro 5G, Mi 9, Redmi K30 Ultra, Redmi K20 Pro, and Redmi K30 Pro)
  6. அதேபோல் பிரைவசி கண்ட்ரோல் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 12 பதிப்பிலேயே இது நடந்திருந்தாலும் இன்னும் பல மாற்றங்கள் வந்துள்ளது.

ஏப்ரல் 2021ல் இந்த மொபைல்களுக்கு முதலில் அப்டேட் வரும்

Mi 11, Mi 10 Ultra, Mi 10 Pro, and Mi 10

About Author