Whatsapp Pay – How to use ?

வாட்ஸ் அப் செயலி, சமீபத்தில் தனது செயலி மூலம் பணம் அனுப்பும் முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால் இன்னும் அனைவருக்கும் இந்த வசதி வரவில்லை. மெதுவாக அப்டேட் வருகிறது. இந்த பதிவில் எப்படி வாட்ஸ் அப் செயலி மூலம் பணம் அனுப்பலாம் என்று பார்ப்போம்.

வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்ப இரண்டு விஷயங்கள் முக்கியம்.

  1. நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் எந்த மொபைல் எண் உபயோகப்படுத்தி இருக்கிறீர்களோ அதே எண்ணில் வாட்ஸ் அப் வசதி இருக்க வேண்டும்.
  2. பணம் அனுப்புபவர், பணத்தை பெறுபவர் இருவரும் வாட்ஸ் அப் பே அப்டேட் செய்திருக்க வேண்டும். நான் இப்பொழுது ராம் என்பவருக்கு பணம் அனுப்பவேண்டுமென்றால் முதலில் நான் என்னுடைய வாட்ஸ் அப் செயலியில் வாங்கி கணக்கை இணைந்திருக்க வேண்டும். அதே போல் ராமும் அவருடைய வங்கி கணக்கை இணைத்திருக்க வேண்டும். இல்லையெனில் UPI ID இருக்க வேண்டும்.

எப்படி உங்கள் வங்கி கணக்கை இணைப்பது

  1. வாட்ஸ் அப் முகப்பில் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை “டேப்” செய்யவும். அதில் வரும் “payments “ ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
Whatsapp Pay

2. அடுத்த ஸ்க்ரீனில் “Add payment method” தேர்வு செய்தால் பின் வங்கிகளின் பட்டியல் வரும். அதில் இருந்து உங்கள் வங்கியை தேர்வு செய்யவும்.

3. அடுத்த ஸ்க்ரீனில் உங்கள் வங்கி கணக்கை காட்டும். அதை தேர்வு செய்யவும். அதன் பின் உங்கள் மொபைலை சரிபார்க்கும் குறுந்தகவல் அனுப்பும்.

4. குறுந்தகவல் மூலம் உங்கள் கணக்கும் , மொபைல் எண்ணும் உறுதி செய்யப்பட்டவுடன் நீங்கள் வாட்ஸ் அப் பே உபயோகிக்க தயார். இப்பொழுது யாருக்கு பணம் அனுப்பவேண்டுமோ அவர்களின் சாட் விண்டோவிற்கு சென்று, கீழே “Attachment ” ஆப்ஷனில் வரும் “Payment” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்களோ அவர்கள் வாட்ஸ் அப் பே செட் அப் பண்ணியிருந்தால் நீங்கள் பணம் அனுப்பலாம். அப்படி இல்லையெனில் அவர்களை இன்வைட் செய்யலாம்

5. அப்படி இல்லையெனில் அதில் கீழே இருக்கும் “Send to another UPI ID” ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதன் பின் “Upi ID ” டைப் செய்து “Verify ” செய்யவும். அதன் பின் அந்த ஐடிக்கு பணம் அனுப்பலாம். இல்லை பணம் வேண்டுமென்றும் கேட்கலாம். அதற்கடுத்த ஸ்க்ரீனில் உங்கள் “UPI PIN ” என்டர் செய்யவும். பணம் அவருடைய அக்கவுண்டிற்கு சென்றுவிடும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.