Most used Android Version as of October

2007 நவம்பரில் முதன் முதலாக ஆண்டிராய்டு பீட்டா பதிப்பு வெளியாகியது. கமர்சியல் உபயோகத்திற்கு முதல் முதலாக வெளியானது 2008 செப்டம்பரில். இப்பொழுது 2021ல் ஆண்டிராய்ட் 12 வெளியாகியுள்ளது ( பிக்ஸல் மொபைல் மற்றும் சில சாம்சங் மொபைல்களில் வெளிவந்து விட்டது). இதற்கு முன்பு 2020ல் ஆண்ட்ராய்ட் 11 வெளிவந்தது. கடந்த அக்டோபர் மாதம் , எந்த ஆண்ட்ராய்ட் பதிப்பு இப்பொழுது அதிக உபயோகத்தில் உள்ளது என ஒரு ஆய்வு நடத்தினார்கள். பொதுவாய் கூகிள் டிஸ்ட்ரிபியூஷன் டேஷ்போர்டில் இந்த விவரங்கள் இருக்கும். ஆனால் அவர்கள் சில மாதமாய் அப்டேட் செய்யவில்லை. எனவே 9to5google இணையத்தளம் ஆண்ட்ராய்ட் ஸ்டுடியோ மூலம் Most used Android Version எது என்பதை கண்டுபிடித்தனர்.

இந்த ஆய்வின் முடிவு எதோ அதிர்ச்சி அளிப்பதை போல் பல தளங்கள் எழுதி இருந்தனர். ஆனால் எனக்கு இதில் எந்த வியப்பும் இல்லை. ஏனென்றால் மிக பிரபலமான நிறுவனங்களைத் தவிர வேறெந்த நிறுவனங்களும் ஆண்ட்ராய்ட் அப்க்ரேட் தருவதில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் இலவச அப்க்ரேட் தந்தால் புதிய மொபைல் வாங்க மாட்டார்கள் என்பது ஒரு முக்கியக் காரணனமாக எண்ணுகிறேன். இந்த ஆய்வின் படி இப்பொழுது அதிகம் உபயோகப்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் பாதிப்பு Android 10. இதற்கடுத்து ஆண்ட்ராய்ட் 11ம் மூன்றாவது இடத்தில் ஆண்ட்ராய்ட் 9ம் இருக்கின்றன.

Most used Android Version

இதில் எனக்கு ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் இன்னும் ஜெல்லி பீன் , கிட்கேட் , லாலிபாப் பதிப்புகள் உபயோகத்தில் இருப்பதுதான். ஏனென்றால் பெரும்பாலான செயலிகள் அந்த பதிப்பிற்கு தங்களது சப்போர்ட்டை நிறுத்திவிட்டார்கள். இதுதான் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் இரண்டிற்கும் உண்டான பெரும் வித்யாசம். நீங்கள் மொபைல் வாங்கி சில மாதங்களிலேயே பழைய ஆண்ட்ராய்ட் பதிப்பை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கலாம். இதில் மிக பெரிய சவால் என்னவென்றால் ஒரு கட்டத்திற்கு மேல் பாதுகாப்பு அப்டேட்களை பழைய மொபைல்களுக்கு நிறுவனங்கள் தருவதில்லை . இது மிகப்பெரிய பிரச்சனை ஆகும். எதோ ஒரு கட்டத்தில் இது மாறியாக வேண்டும். அது எப்பொழுது என பார்ப்போம்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.