வாட்ஸ் அப்பில் ஏற்கனவே “Disappearing Messages” கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது, நீங்கள் இந்த வசதியை பயன்படுத்த விரும்பினால், உங்கள் சாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இந்த வசதியை “ஆன்” செய்ய வேண்டும். அதே போல், இப்பொழுது 7 நாட்கள் கழித்தே மெசேஜ் டெலீட் ஆகும். அதற்கு முன்னால் ஆகாது.
இப்பொழுது வாட்ஸ் அப் நிறுவனம், இதற்கு தனியாக ஆப்ஷன்களை சோதித்து வருகிறது. உங்களுடைய சாட் அனைத்திற்கும் நீங்கள் “disappearing messages ” ஆப்ஷனை ஒரே நேரத்தில் கொண்டு வரலாம். இப்பொழுது ஒவ்வொரு சாட்டிற்கும் தனியாக இருக்கும் இந்த ஆப்ஷன் விரைவில் “privacy ” ஆப்ஷனுக்கு கீழே செல்ல இருக்கிறது. இது சம்பந்தமாய் wabetainfo தளத்தில் இருந்து எடுத்த ஸ்க்ரீன்ஷாட்
அதேபோன்று, இப்பொழுது இருக்கும் 7 நாட்கள் என்ற டைம்லைனும் மாற உள்ளது. இப்பொழுது வந்துள்ள ஸ்க்ரீன்ஷாட் படி 24 மணி நேரத்தில் இருந்து 90 நாட்கள் வரை நீங்கள் மூன்று ஆப்ஷன்களை ( 24 மணி நேரம் / 7 நாள் / 90 நாள் )தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கான ஸ்க்ரீன்ஷாட் கீழே உள்ளது.
இந்த வசதி இன்னும் சோதனையில் உள்ள ஒன்று. அதே போல் இன்னும் பீட்டா டெஸ்டர்களுக்கும் இந்த அப்டேட் வரவில்லை. எனவே இந்த வசதிகளில் ஏதாவது மாற்றம் இருக்கலாம். அதே போன்று இது ஆண்டிராய்டு மொபைலுக்கான செயலியில் எடுக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட். பொதுவாய் ஆன்ட்ராய்ட் / ஐ ஓ எஸ் இரண்டிற்கும் ஒரே மாதிரி அப்டேட்கள்தான் வாட்ஸ் அப் கொண்டு வரும். எனவே இந்த வசதி ஐ போன்களுக்கும் வரும் என்று நம்புவோம்.
One Reply to “New disappearing messages option- Whatsapp”
Comments are closed.