அழியாத மனக்கோலங்கள் – 4

This entry is part 4 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

“தம்பீ! இது புதுப் பத்திரிகை.. நிறைய விளம்பரம் பண்ணனும். கடைக்குக் கடை விக்கறதோ இல்லையோ போஸ்டர் தொங்கி ஒரு பரபரப்பு ஏற்படுத்தணும். பிரகாசமான விளக்குகள் எரியும் போது இது சிம்னி விளக்கைக் கொளுத்தி வைச்ச மாதிரி இருக்கு. பத்திரிகைகாரங்க கிட்டே நிறைய கடைலே மாட்ற போஸ்டர் கேட்டு வாங்கு. பிக்-அப் ஆறதுக்கு இதான் நேரம். ஆயிடுச்சின்னு வைச்சுக்கோ.. அப்புறம் தன்னாலே ஜனங்களே கேட்டு வாங்குவாங்க.. தெரிஞ்சிக்கோ…” என்று அவர் சொன்னது அலிபாபா குகைக் கதவைத் திறந்த மந்திரமாக எனக்குப் பட்டது.

நேர்த்திக் கடன்

நேர்த்திக் கடன்

குழந்தையில்லாதவர்களை எப்படி நடத்துவார்களென்பதை என் குடும்பத்திலேயே பார்த்துள்ளேன்.நானும் கொஞ்சம் பருமனான உடல்வாகுடையவள்தான். போதாக் குறைக்கு பிட்னெஸ் ட்ரிங்க்களும் 30 நாட்களில் எடைக் குறைக்கலாம் முகாம்களும் அதிகமாக வரத் துவங்கிய வேளை அது. அவசரமாக சாலையைக் கடக்கும்போது, பேருந்தில் என்று எங்கு பார்த்தாலும் அந்த விளம்பர நோட்டிஸ்கள் வம்படியாக என் கைகளில் திணிக்கப்பட்டன. குண்டாக இருந்தால் குழந்தை பிறக்காது என வேறு கூறிச் சென்றனர். இதென்ன முருகா சோதனை. அப்படியொரு கஷ்டத்தை எனக்கு கொடுத்து விடாதே. எனக்கு நல்லபடியாக திருமணம் முடிந்து முதலில் நீயே வந்து பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.அப்படி பிறந்தால்………

அழியாத மனக்கோலங்கள் – 3

This entry is part 3 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

புதுப் பத்திரிகையின் முதல் இதழ். அதைப் பார்க்க வேண்டும் என்று மனது அடித்துக் கொண்டது. உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு சேலம் டவுன் ரயில் நிலையத்திற்குப் பறந்தேன். அங்கு பார்ஸல் பகுதிக்குப் போய் பில்லைக் காட்டினேன். ஏதாவது ஐடி இருக்கிறதா என்று கேட்டார்கள். இல்லை என்று தெரிந்ததும் உங்களை ஏஜெண்ட்டாக நியமித்த கடிதமாவது இருக்கிறதா என்று கேட்டார்கள். கொண்டு வரவில்லை என்று தெரிந்ததும் உங்கள் ரப்பர் ஸ்டாம்பு சீலாவது கொண்டு வந்திருக்கிறீர்களா என்று லேசான எரிச்சலுடன் கேள்வி வந்தது.

அழியாத மனக்கோலங்கள் – 2

This entry is part 2 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

எழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு எப்படி அந்நாளைய தமிழ் எழுத்தாளர்கள் பிடித்துப் போனதோ அப்படியே மேடைப் பேச்சில் பல புதுமைகளைப் புகுத்திய அந்நாளைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் மனசுக்கு மிகவும் பிடித்துப் போனவர்கள் ஆனார்கள். அவர்கள் பேசிய தமிழ் மனதைக் கவர்ந்தது. மேடைப் பேச்சிலும் உரைநடையிலும் அடுக்கு மொழியைப் புகுத்திய அண்ணாவின் தமிழ் கேட்டு தேன் மாந்திய வண்டானேன். வீட்டு வெளித் திண்ணையில் படுத்துக் கொள்வதாக சொல்லி விட்டு பாயும் தலையணையையும் போட்டு விட்டு முன் இரவு தாண்டியதும் அண்ணா பேசுகிறார் என்றால் பொதுக் கூட்டத் திடலுக்குப் போய்விடுவேன்.

வீரபத்திரச் சருக்கம்( இரண்டாம் பகுதி)

This entry is part 4 of 4 in the series சேலத்துப் புராணம்

அத்தியாயம்-3 தக்ஷனின் யாகத்திலிருந்து வெளியேறிய ததீசி முனிவரை நாரதர் வழி மறித்தார். நேரே கயிலாயம் சென்று உமா மகேஸ்வரனை மனந்தினாலும், நாவினாலும், உடலினாலும் சிந்தித்து, துதித்து வணங்கி நடந்தவற்றை முறையிட்டார். “இல்லை நாரதா! தக்ஷன் “வீரபத்திரச் சருக்கம்( இரண்டாம் பகுதி)”

அழியாத மனக்கோலங்கள்

அழியாத மனக்கோலங்கள் – 1

This entry is part 1 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

சேலம் நகர அமைப்பே விசித்திரமானது. மிகப் பெரிதும் அல்லாத அதே நேரத்தில் மிகச் சிறிதும் அல்லாத அமைப்பைக் கொண்ட நடுவாந்திர நகரம் அது. மூன்று இரயில் நிலையங்களைக் கொண்ட விசேஷம் கொண்ட ஊர். மெயின் இரயில் நிலையம் இருந்த இடம் சூரமங்கலம் என்று அழைக்கப்பட்ட பகுதி. இரண்டாவது ரயில் நிலையம் முற்றிலும் வியாபார போக்குவரத்துக்கு ஒதுக்கப்பட்டு மார்க்கெட் இரயில் நிலையம் என்றிருந்தது. சேலத்தின் மிகப் பெரிய வியாபார ஸ்தலமான லீபஜார் அருகிலேயே இருந்தது. இந்த இடத்தில் நடப்பது என்பது லாரிகளுக்கிடையே புகுந்து வெளி வருவதாகத் தான் இருக்கும். மூன்றாவது இரயில் நிலையம் டவுன் ரயில்வே ஸ்டேஷன். நகர்ப் புறத்து மக்கள் வாழும் பகுதி. சென்னைக்கு அடுத்தபடி சேலத்தில் தான் திரையரங்குகள் அதிகம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு சினிமா பார்ப்பதில் பிரியம் கொண்டவர்கள்.

​வீரபத்திரச் சருக்கம் முதல் பகுதி

This entry is part 3 of 4 in the series சேலத்துப் புராணம்

நீண்ட சடைமுடியியில், இளஞ்சந்திரனையும் கங்கையினையும் அணிந்தவரும், மானையும் மழுவையும் கரங்களில் ஏந்தியவரும், நெற்றிக்கண்ணை உடையவரும், தேவர்களின் மணிமுடிகள் தனது பாதங்களில் பட்டுக் கொண்டிருப்பவரும் , கொன்றை மாலையை முடியில் அணிந்தவரும், அரவத்தை இடுப்பினில் அணிந்தவருமான சிவபெருமான் கயிலாயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்க தேவர்களும், ரிஷிகளும், சிவனடியார்களும் நான் முந்தி நீ முந்தி என்று அவரை தரிசிக்க நெரிசலை உண்டு பண்ண நந்திதேவர் அவர்களை நெறிப்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்.

கயிலாயச் சருக்கம்​

​சேலத்துப் புராணம் – ​கயிலாயச் சருக்கம்​

This entry is part 2 of 4 in the series சேலத்துப் புராணம்

​பொன்முடிகளால் மின்னும் வெள்ளியங்கிரியாக விளங்கும் கயிலாய மலையின் மீது சிவபெருமான் வீற்றிருந்தார். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளை வந்து தொழுவதற்கு பிரம்ம தேவனும், மகா விஷ்ணுவும் காத்திருந்தனர். நாதன் அருளும் மலை, நான்மறை தோன்றிய மலை, பர்வத ராஜனின் மகளான பார்வதி தேவி எம்பெருமானுக்கு இட பாகத்தில் அமர்ந்து காட்சி தந்து கொண்டிருக்கும் மலை. இந்தக் கயிலை மலையின் அகலம் இருபது கோடி யோசனையாகும். நாற்பது கோடி யோசனை தூரம் நீளத்தை உடையது அந்த உயர்ந்த மலை. பல இலட்ச எண்ணிக்கையில் சிகரங்களைத் தன்னகத்தே கொண்ட மலை (ஒரு யோசனை என்பது நான்கு மைல்களிலிருந்து ஏழு மைல் கல் நீளம்- ஆசிரியர்)

சேலத்துப் புராணம்

சேலத்துப் புராணம் – 1

This entry is part 1 of 4 in the series சேலத்துப் புராணம்

சேலத்திற்கும் விநாயகருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஊரின் நடு நாயகமாக வீற்றிருக்கும் ஸ்ரீராஜகணபதியின் பாத கமலங்களை வணங்கி இந்தப் புராணத்தை எழுத ஆரம்பிக்கிறேன். இந்த தலத்தில்தான் ஔவையார் பல அற்புத நிகழ்ச்சிகளை செய்திருக்கிறார். கஞ்சமலை சித்தர் தகடூர் அரசன் அதியமான் நெடுமான் அஞ்சிக்கு கொடுத்த நெல்லிக்கனியை ஔவைக்கு வழங்கிய இடம் சேலம். ஔவையார் மாதவி என்ற பெண்மணியின் இரண்டு பெண்களின் திருமணத்திற்கு சேர சோழ பாண்டியர்களை வரவழைத்த இடம் சேலம். காய்ந்து போன பனை மரத்தைப் பூத்துக் குலுங்க வைத்து பனம்பழம் பறித்த இடம் இந்தச் சேலம் நகரம். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் முந்திக் கொண்டு கயிலாயம் சென்று விட ஔவையார் விநாயகர் அகவல் பாடியதும் தனது துதிக்கையால் செந்தூக்காகத் தூக்கி கயிலாயத்தில் விநாயகப் பெருமான் வைத்த இடம் இந்தச் சேலம் நகராகும். அந்தப் புராணத்தை அந்த விநாயகரின் பாதங்களைத் தொழுது தொடங்குகிறேன்.