வாட்ஸ் அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் விதம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த வாய்ஸ் மெசேஜை டெக்ஸ்ட் மெசேஜ் சரி பார்த்து அனுப்புவது போல் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப இயலாது. இதை வாட்ஸ் அப் ஆன்ட்ராய்ட் பீட்டா பதிப்பில் வாய்ஸ் மெசேஜ் செக் செய்து அனுப்பும் வசதியை சமீபத்தில் கொண்டு வந்தது. இதிலும் மெசேஜ் செக் செய்துவிட்டால் பிறகு அதே வாய்ஸ் மெசேஜில் தொடர்ந்து பேச இயலாது. அதை அனுப்பவோ இல்லை டெலீட் பண்ணவோ மட்டுமே முடியும். இப்பொழுது வாட்ஸ் அப் டெஸ்க் டாப் மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளில் புதியதாய் ஒரு வசதியை இந்த குரல் பதிவிற்கு கொண்டுவந்துள்ளது. அதாவது “Pause and Record voice messages”.
இந்த புதிய வசதி ஆன்ட்ராய்ட் பதிப்பிற்கு இன்னும் வரவில்லை. எனவே நீங்கள் விண்டோஸ் டெஸ்க் டாப் பதிப்பில் இதை உபயோகப்படுத்த இயலும். மேலும் வாட்ஸ் அப் வெப்பிலும் உபயோகப்படுத்த இயலும். இதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என கீழே பார்க்கலாம்.
- யாருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பவேண்டுமோ அந்த சாட் விண்டோவை ஓபன் செய்து கொள்ளவும்
- இப்பொழுது குரல் செய்தியை பதிவு செய்யவும்.
- பதிவு செய்தவரை கேக்க வலது பக்கம் Pause பட்டன் இருக்கும். அதை பிரஸ் செய்து பதிவு செய்ததை கேட்கவும்.
- தொடர்ந்து குரலை பதிவு செய்ய வலது பக்கம் மைக் பட்டனை பிரஸ் செய்யவும். இல்லை அனுப்ப வேண்டுமென்றால் send பட்டனை பிரஸ் செய்யவும். பதிவு செய்ததை நீக்க, இடது பக்கம் ” Recycle bin ” ஐகானை பிரஸ் செய்யவும்.
கீழே “Pause and Record voice messages” ஸ்க்ரீன் ஷாட்