Phone pe மற்றும் அனைத்து UPI பேமெண்ட் செயலிகளும் கடந்த ஒன்றரை வருடங்களில் இந்தியாவில் வியக்கத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளன. பெரு நகரங்களில் மட்டுமல்லாது சிறு நகரங்கள் மற்றும் டவுன்களில் கூட இந்த செயலிகளை உபயோகப்படுத்தி பணம் செலுத்துவோர் மற்றும் கடைகளில் இந்த வசதியை உபயோகிப்பவர்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றனர். அதுவும் கொரானா வந்ததில் இருந்து டிஜிட்டல் வசதியை உபயோகிப்பவர்கள் அதிகம். இந்நிலையில் இந்த செயலியைக் கொண்டு மொபைல் ரீசார்ஜ் செய்தால் இனி அதற்காக தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும் என இச்செயலி அறிவித்துள்ளது.
இவ்வறிவிப்பின் படி இனி Phone pe செயலியை உபயோகப்படுத்தி 50 ரூபாய்க்கு மேல் 100 ரூபாய்க்குள் ரீசார்ஜ் செய்தால் ருபாய் 1 கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறியுள்ளது. மேலும் நூறு ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் இரண்டு ரூபாய் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது.
மேலே உள்ள ஸ்க்ரீன்ஷாட் எனது மொபைலில் எடுக்கப்பட்டது. எனது எண்ணுக்கு ரீசார்ஜ் செய்யும் பொழுது இந்த ஒரு ரூபாய் கூடுதல் கட்டணம் வருகிறது.
இந்த கட்டண வசூல் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இப்பொழுதைக்கு இந்த கட்டணம் குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் சோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அனைவருக்கும் இது இப்பொழுது பொருந்தாது என சொல்லியுள்ளனர். இந்த சோதனை வெற்றி பெற்றால் அனைவருக்கும் இந்த கட்டண முறை அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளது.