Rate WhatsApp messages – Android

நம்மில் பலருக்கும் ஏற்கனவே வாட்ஸ் அப் செயலியில் வரும் மெஸேஜ்களை ரிப்போர்ட் செய்யும் வசதி உண்டு என்பது தெரியும். எந்த ஒரு மெசேஜாக இருந்தாலும் அந்த மெசேஜை ரிப்போர்ட் செய்யலாம். அதிகமாக ரிப்போர்ட் செய்யப்படும் வாட்ஸ் அப் எண் ஆராயப்பட்டு தடைசெய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. அதே போன்று இப்பொழுது புதிதாய் தனது ஆண்ட்ராய்ட் பீட்டா 2.21.22.7 பதிப்பில் மெசேஜ்களை ரேட் செய்யும் Rate WhatsApp messages வசதியை இன்று அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். இந்த வசதி எப்படி வேலை செய்யும் என பார்ப்போம்.

Rate WhatsApp messages

Rate WhatsApp messages என்னும் இந்த வசதி மூலம், வாட்ஸ் அப் பிஸ்னஸ் அக்கவுண்ட்களில் இருந்து வரும் மெசேஜ்களை நீங்கள் ரேட் செய்யலாம்.

  1. எந்த மெசேஜை மதிப்பிட விரும்புகிறீர்களோ அதை செலெக்ட் செய்யவும்
  2. இப்பொழுது வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொடவும்
  3. அதில் ரிப்போர்ட் மற்றும் rate என்ற ஆப்ஷன்கள் வரும்.
  4. அதில் Rate என்பதை தேர்வு செய்யவும்
  5. இப்பொழுது ஐந்து ஸ்டார்களை காட்டும். எத்தனை ஸ்டார் குடுக்க விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்யவும். நீங்கள் அளிக்கும் ரேட்டிங் அந்த நபருக்கு தெரிய வராது. இதன் ஸ்க்ரீன்ஷாட்கள் கீழே

இந்த வசதி இப்பொழுது ஆன்ட்ராய்ட் செயலி பீட்டா பதிப்புக்கு மட்டுமே வந்துள்ளது. வாட்ஸ் அப் வெப் / வாட்ஸ் அப் டெஸ்க் டாப் இரண்டிற்கும் இன்னும் வரவில்லை. அதே போல் இந்த வசதி ஐஓஎஸ் செயலுக்கு வந்துள்ளதா என்பதை பற்றிய தகவல் இல்லை.

வாட்ஸ் அப் பீட்டா பற்றிய முந்தைய பதிவு

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.