ஆன்ட்ராய்ட் மொபைலின் மிக முக்கியமான செயலி கூகிள் ப்ளே ஸ்டோர். இப்பொழுது கூகிள் நிறுவனம் Play Store UI ஐ மாற்றியுள்ளது. முன்பு நீங்கள் அந்த செயலியை துவங்கியவுடன் இடது பக்கம் ஹேம்பர்கர் மெனு இருக்கும் ( மூணு கோடுகள்). அதை டச் செய்தால் உங்களுக்கு உங்கள் மொபைலியில் இன்ஸ்டால் ஆகியுள்ள செயலிகள் , நோட்டிபிகேஷன் , அப்டேட் செட்டிங்ஸ் என்று அனைத்து ஆப்ஷன்களையும் பார்க்கலாம். இப்பொழுது இது மாறியுள்ளது.
புதிய Play Store UI யில் இந்த ஹேம்பர்கர் மெனு இல்லவே இல்லை. அதற்கு பதில் வலது மேல் மூலையில் உங்கள் அக்கவுண்ட் மற்றும் உங்கள் கூகிள் டிஸ்பிளே படம் இருக்கும். அதை டச் செய்தால் முன்பு மெனுவில் வந்த ஆப்ஷன்களை காட்டும். நோட்டிபிகேஷன் / அப்டேட் / செயலிகள் லிஸ்ட் என்று தனியாக இல்லை. இவையனைத்தையும் ஒன்று சேர்த்து “My Apps & Games” என்ற ஒரே ஆப்ஷனில் கொண்டுவந்துவிட்டனர். அதை டச் செய்தால் முதல் டேபில் Updates ,அடுத்து Installed அடுத்து library அதற்கடுத்து புதிதாய் “share” அதற்கடுத்து “beta” என்று ஆப்ஷன்களை காட்டும்.
இந்த share ஆப்ஷன் மூலம் நீங்கள் செயலிகளை நேரடியாக பகிர அல்லது பெற முடியும். இதற்கு நெட் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. Near By Share என்ற ஆப்ஷன் மூலம் நெட் இல்லாமலும் செயலிகளை அருகில் இருப்பவருடன் பகிர்ந்து கொள்ள இயலும்.
இவற்றிற்கான பட விளக்கம் கீழே