வாட்ஸ் அப் செயலியில் பிரைவசி செட்டிங்ஸ் பொறுத்தவரை தொடர்ந்து பல மாற்றங்களை தந்து கொண்டு வருகிறது மெட்டா நிறுவனம். சமீபகாலமாக வாட்ஸ் அப் உபயோகப்படுத்துவோர் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்சனை சம்பந்தமில்லாத நபர்களிடம் இருந்து வரும் வாட்ஸ் அழைப்புகள் குறிப்பாய் வேலைவாய்ப்பு / வீட்டிலிருந்து சம்பாதிக்கக்கலாம் போன்ற ஏமாற்று வேலை செய்பவர்களிடம் இருந்துதான். இப்பொழுது ” Privacy Checkup “ என்ற புதிய வசதியை கொண்டுவந்துள்ளது மெட்டா நிறுவனம். இதை பற்றி இன்று அவர்களின் தளத்தில் அறிவித்துள்ளனர்.
Privacy Checkup
ஏற்கனவே பல இடங்களில் தனித்தனியாக இருந்த வசதிகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்துள்ளனர். வாட்ஸ் அப் செயலியின் செட்டிங்ஸ் பகுதியில் ” privacy ” ஆப்ஷனுக்குள் சென்றால் புதிதாய் ” Privacy Checkup” என்ற வசதி மேலே காணப்படும்
இதற்கடுத்த பகுதியில் , யார் உங்களை தொடர்பு கொள்ள இயலும், யார் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் , உங்கள் DP பார்க்க இயலும் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர் உங்களை தொடர்புகொள்வதை தவிர்க்க எண்ணினால் இந்த ஆப்ஷனில் ” Choose who Can Contact You “ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும் அதனுள் ” Silence Unknown Callers” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அந்த வசதியை ” Enable ” செய்யவும்.
இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் , இந்த ஆப்ஷன் மூலம் உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர் உங்களுக்கு அழைப்பதை தடுக்க இயலாது. உங்கள் கான்டெக்ட்டில் இல்லாத ஒருவர் அழைக்கும் பொழுது அந்த அழைப்பு தானாகவே சைலன்ட் மோடில் இருக்கும். ஆனால் வாட்ஸ் அப் செயலியில் உள்ள ” Calls “ டேபில் அந்த அழைப்பு காட்டும்.
ஏற்கெனவே இருக்கும் பல பிரைவசி செட்டிங்ஸ் ஒரே இடத்தில் இருப்பதால் நீங்கள் உங்கள் பிரைவசி செட்டிங்ஸ் அனைத்தையும் ஒரே இடத்தில் பரிசோதித்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதி ஆன்ட்ராய்ட் / ஐ ஓ எஸ் இரண்டிற்குமே கொண்டுவந்துள்ளனர். அநேகமாய் அனைவருக்கும் ஓரிரு நாட்களில் அப்டேட் ஆகிவிடும்.
நல்ல தகவல் நன்றி 🙏