Scareware – Be careful about links you receive

நாம் அனைவருமே malware, adware பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். எதோ ஒரு தருணத்தில் அவற்றால் அவதிப்பட்டிருப்போம். இந்த வரிசையில் புதிதாய் இப்பொழுது நுழைந்துள்ளது “Scareware”. நமக்கு malware என்ன செய்யும் என்று தெரியும். அதுபோல் இந்த scareware என்ன செய்யும் ?

பெயருக்கு ஏற்றார் போல் பயனாளர்களை பயமுறுத்தி அதன் மூலம் லாபம் அடைய பார்ப்பவை இந்த “Scareware”. வாட்ஸ் அப் அல்லது வேறு மெசேஞ்சர் சர்வீஸ்கள் , சில இணையதளங்கள் சில சமயம் குறுஞ்செய்தியில் கூட உங்களுக்கு கீழக்கண்ட மெசேஜ் வரலாம் அல்லது இது போன்ற மெசேஜ்.

"Your phone might have been affected with malware / virus. Click here to scan"

இப்படி ஒரு மெசேஜ் வந்தால் பலரும் அதை க்ளிக் பண்ணி ஸ்கேன் செய்ய நினைப்பர். ஆனால் பிரச்சனை அங்குதான் ஆரம்பம் ஆகும்.

  1. இப்படி வருபவை போலி மெசேஜ்கள்
  2. இந்த மெசேஜுடன் வரும் லிங்கை க்ளிக் செய்தால் உங்கள் ஸ்மார்ட் போனில் உங்கள் தகவல்களை திருடும் செயலிகள் தானாக இன்ஸ்டால் ஆகும்.
  3. அதன் பின் உங்கள் மொபைலில் இருக்கும் உங்கள் வாங்கி எண் அதற்குண்டான பாஸ்வேர்ட் திருடப்பட்டு மற்றவர்களுக்கு அனுப்பப்படும்.
  4. அதே போல் உங்கள் மொபைலில் adware லோட் ஆகலாம். இதனால் மொபைலின் செயல் திறன் குறையும்.

இதற்கு தீர்வு

  1. குறுஞ்செய்தியில் வரும் லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம்
  2. எப்பொழுதும் நேரடியாக வங்கியின் நெட் பேங்கிங் செல்லவும். அதே போல் அடிக்கடி உங்கள் வங்கி செயலிக்கான பாஸ்வேர்ட் மாற்றவும்.

அப்படி தெரியாமல் இன்ஸ்டால் ஆகி விட்டது எனில் எளிதாக நீக்கலாம்.

செட்டிங்ஸ் பின் அங்கிருந்து apps சென்று என்ன என்ன செயலிகள் இருக்கிறது என பாருங்கள். இந்த போலி செயலிகளை ஆப் ஐக்கான் இருக்காது. அதனால் எளிதில் கண்டறிந்து நீக்க இயலும்.

எப்பொழுதும் செயலிகளை கூகிள் ஆண்ட்ராய்ட் ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டுமே இன்ஸ்டால் செய்யவும். இது பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

News source : https://tech.hindustantimes.com/mobile/news/smartphone-malware-scareware-cybercriminals-online-short-url-phone-hacking-banking-trojans-sms-money-loss-google-android-mobile-phones-71627199686994.html

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.