Screenshot blocking – profile photo – Whatsapp

வாட்ஸ் அப் வந்த புதிதில் உங்கள் ப்ரொபைல் படத்தை உங்கள் நட்பில் இருப்பவர் யார் வேண்டுமானாலும் தங்கள் அலைபேசியில் சேமித்துக் கொள்ளும் வசதி இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு இந்த வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் நீக்கி விட்டது. ஆனாலும், பிறர் உங்கள் ப்ரொபைல் படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுப்பதில் இருந்து தடுக்க இயலாத ஒன்றாக இருந்தது. இப்பொழுது இதற்கும் ஒரு தடை கொண்டுவந்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.

Screenshot blocking

இப்பொழுது வந்துள்ள ஆண்டிராய்ட் பீட்டா பதிவு 2.24.4.25 அப்டேட் செய்த பிறகு உங்களுடைய ப்ரொபைல் படத்தை யாராலும் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க இயலாது. இப்பொழுது இந்த வசதி சில பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் அப்டேட் ஆனாலும், விரைவில் அனைவருக்கும் அப்டேட் ஆகும். இந்த புதிய பாதுகாப்பு அம்சத்திற்கு பிறகு யாரேனும் உங்கள் படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முயன்றால் கீழே உள்ள செய்தி வரும் ” can’t take screenshot due to app restrictions “.

இது அனைவருக்கும் தேவையான ஒரு பாதுகாப்பு அம்சமாகும். இதன் மூலம் நமது ப்ரொபைல் படங்கள் களவாடப்படுவதை தவிர்க்கலாம்.

Screenshot blocking

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.