ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 1

This entry is part 1 of 44 in the series ஶ்ராத்தம்

ராம் ராம். அனைவருக்கும் வணக்கம். நண்பர் பாண்டிச்சேரி ரமேஷ் சில பல நாட்கள் முன்னால் ஸ்ராத்தம் பற்றி எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதுதான் நிறைய புத்தகங்கள் எல்லாம் இருக்கிறதே நான் எதற்கு எழுத வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் – “இல்லை அந்த புத்தகங்கள் எல்லாம் படித்து தெரிந்துகொள்ள புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அதனால் நீங்கள் வழக்கம் போல் எளிமையாக பேசி எழுதினால் நன்றாக இருக்கும்” என்றார். அதை கிடப்பில் போட்டுவிட்டு […]

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 2

This entry is part 2 of 44 in the series ஶ்ராத்தம்

முந்தைய பாகத்தை படிக்க முக்கிய விஷயத்துக்குள் போகும் முன் ஒரு சின்ன விஷயம். ஶ்ராத்தம் என்று எழுதுவதே சரி. சிலர் இந்த ஶ வை பார்க்க முடிவதில்லை என்று சொல்கிறார்கள். அதனால் உலக நடைமுறையை ஒட்டி சிராத்தம் என்று எழுதுகிறேன். இன்னொரு முக்கிய விஷயம் இது சிரார்த்தம் இல்லை. கூடுதல் ர் வராது. ஆனால் பலரும் இப்படி தப்பாக உச்சரிப்பதை பார்க்கலாம். அதனால் சொன்னேன். சரி, முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் நாம் இந்த சிராத்தத்தை […]

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 3

This entry is part 3 of 44 in the series ஶ்ராத்தம்

இதன் முந்தைய பதிவுகளை வாசிக்க ஶ்ராத்தம் என்ற சொல்லே ஶ்ரத்தை என்ற சொல்லில் இருந்து வருகிறது. அதாவது நாம் ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து, முழு விசுவாசத்துடன், சரியாக கர்மாவை நாம் செய்தால் முழு பலன் கிடைக்கும் என்ற எவ்வளவு முடியுமோ அவ்வளவு சரியாக செய்ய வேண்டிய கர்மா. அதனால்தான் இதற்கு சிராத்தம் என்று பெயர். இந்த சிராத்தத்திற்கு அவசியமாக -குறைந்த பக்‌ஷம் – யார் யார் வேண்டும் என்று பார்த்தால் நிச்சயமாக நடத்தி வைக்கும் வாத்தியார் […]

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 4

This entry is part 4 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க (விஶ்வேதேவர் என்பதே சரியாக எழுதும் முறை.) நல்லது. வந்தவர்களில் வயதானவரை விஸ்வேதேவராக வரணம் செய்யவேண்டும். பித்ருக்களாக இரண்டாம் நபரை வரணம் செய்ய வேண்டும். அட்சதை இங்கே ஆரம்பத்தில் பொதுவாக சில விஷயங்களை சொல்லி விடுகிறேன். விஸ்வேதேவருக்கு எந்த உபசாரம் செய்வதாக இருந்தாலும் நாம் வழக்கமாக பூணூல் அணிவது போல அதாவது இடது தோளில் பூணூல் இருப்பதாக செய்ய வேண்டும். அட்சதை என்கிற முனை முறியாத அரிசியை உபயோகப்படுத்த வேண்டும். மங்களாக்‌ஷதை […]

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 5

This entry is part 5 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க விஶ்வேதேவர், ஶ்ராத்தத்துக்கு முன். வயதாகிவிட்டது. பலதும் மறந்து போகிறது. ஆகவே நோக்கம் வழக்கமான சிராத்தத்தை கொஞ்சம் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டு போவதுதான் என்றாலும் இந்த விஶ்வேதேவர் குறித்து இங்கே ஒரு விஷயம். விஶ்வா என்பவள் தக்ஷப் ப்ரஜாபதியின் மகள். அவளுடைய பிள்ளைகள் 12 பேர். அவர்களே விஶ்வேதேவர்கள். இவர்களே சிராத்தங்களில் பலம் சேர்க்க பிரம்மாவால் படைக்கப்பட்டவர்கள். பிசாசர்கள், ராக்ஷசர்கள், யக்ஷர்கள், பல விதமான பூதங்கள் ஆகியோர் விஸ்வேதேவர் இல்லாத ஸ்ராத்தத்தை நாசப்படுத்துகின்றனர். […]

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 6

This entry is part 6 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் முந்தைய பதிவுகளைப் படிக்க காலை முன்னேற்பாடுகள், ஆரம்பம் வரிக்கப்படும் பிராமணர்கள் வந்து சேரும் போது இன் முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு (சரீர சுத்திக்கு) நல்லெண்ணெய் அரப்புப் பொடி குளிக்க வென்னீர் பல் தேய்க்க குச்சி ஆகியவற்றை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். வாய் சுத்தமாக இருக்க தாம்பூலம், ம்னது சுத்தமாக இருக்க (கிருசரம்) எள்ளுருண்டை முதலியவற்றை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதில் எண்ணை தேய்த்து குளிப்பது மிகவும் அவசியமானதாகும். சில நாட்கள் எண்ணை தேய்த்துக் குளிக்க […]

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 7

This entry is part 7 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை வாசிக்க காலம், நெற்றிக்கு இட்டுக்கொள்வது இப்போது சிராத்தத்தை ஆரம்பிக்கிறோம். இங்கே புத்தகத்தில் இருக்கும் விவரங்களை பார்க்கவில்லை. முக்கியமானதை பார்த்துக் கொண்டு போகிறோம். போன பதிவில் யார் யாரை எப்படி வரணம் செய்கிறோம் என்றெல்லாம் பார்த்தோம். அதன் மேல்படி அதிக விவரங்களை இப்போதைக்கு பார்க்கவில்லை. சரி எந்த காலத்தில் இந்த சிராத்தம் செய்ய வேண்டும் என்றால் குதப காலத்தில் செய்ய வேண்டும் என்கிறார்கள். சூரிய உதயம் காலை 6 மணிக்கு இருக்குமானால், மாத்யான்ஹிக […]

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 8

This entry is part 8 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் முந்தைய பகுதிகளை படிக்க சங்கல்பத்தில் இந்த காலத்தில் யோகம் கரணம் சொல்லும் வழக்கம் விட்டுப் போயிருக்கிறது அவை ஒன்றும் கடினமான விஷயம் இல்லை ஆகவே சிரத்தை உள்ளவர்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்து யோகம் கரணம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பல வைதிகர்களும் இந்த காலத்தில் அவற்றை சொல்லுவது இல்லை. ஆகையால் நாமே அவற்றை பார்த்து வைத்து சொல்லிவிடலாம். இன்ன கோத்திரத்தில் பிறந்த இந்த பெயருள்ள அப்பா அல்லது அம்மா அவர்களுக்கு பார்வண விதிப்படி சிராத்தத்தை செய்கிறேன். முடிந்தவரை […]

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 9

This entry is part 9 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க விஷ்ணு இலை பஞ்சாயத்து நல்லது. இப்போது இடையே விஷ்ணுவைப் பற்றி ஒரு பஞ்சாயத்து வந்து விட்டது. ஆகவே மேலே போகும் முன் அதை பார்த்து விட்டு போகலாம். இல்லையென்றால் மறந்தாலும் மறந்துவிடும். எப்படி விஸ்வேதேவர் பித்ருக்கள் என்று இரண்டு பேரை வரணம் செய்கிறோமோ அது போலவே விஷ்ணு என்று மூன்றாவதாக ஒருவரை வரணம் செய்வதே சரியான முறை. இதுவே பழக்கத்தில் இருந்து இருக்கிறது பின்னால் ராஜாக்கள் ஆட்சியெல்லாம் முடிவுக்கு வந்து […]

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 10

This entry is part 10 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பகுதிகளை படிக்க விஸ்வேதேவரிடம் சென்று அவர் தலையில் அட்சதை போட வேண்டும். வலது பக்கமாக முழங்காலிலிருந்து உடல், தோள், வலது பக்க தலை ஆகியவற்றில் அட்சதை போட வேண்டும். வாத்தியார் நாலே நாலு அரிசியை எடுத்துக் கொடுத்தால் இப்படி செய்ய முடியாதுதான். ஆகவே நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்றால் வாத்தியாருக்கும் நமக்கும் கொஞ்சம் புரிதல் இருக்க வேண்டும். கொஞ்சம் சிரமம்தான். பிறகு பூணூலை தோள் மாற்றிக்கொண்டு வசு ருத்ர ஆதித்ய வடிவங்களான எனது […]