டெலிகிராம் போன்ற பிற செயலிகளில் வெகு நாட்களாக இருந்து வரும் ” Edit message ” வசதியை இப்பொழுது வாட்ஸ் அப் செயலி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வாட்ஸ் அப் நிறுவனத்தின் ப்ளாகில் வெளியாகி உள்ளது. இந்த வசதி பலருக்கும் உபயோகமாக இருக்கும். நீங்கள் தவறாக எழுத்துப் பிழைகளுடன் அனுப்பி விட்டால் அதை திருத்திக் கொள்ளலாம் அல்லது அனுப்பிய தகவலில் மாற்றங்கள் வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம்.