இப்பொழுது அதிகம் பேர் டவுன்லோட் செய்யும் செயலியான டெலிகிராம் தற்பொழுது அதன் பீட்டா பதிவு 7.5.0வை ரிலீஸ் செய்துள்ளது. அதன் பீட்டா சோதனைக்கு ஏற்கனவே ஒத்துக்கொண்டுள்ள பயனாளர்களுக்கு கீழ்கண்ட புதிய வசதிகள் வந்துள்ளது.
QR Code for Group Invite and Time limited Invites
இனி Telegram App ல் க்ரூப் இன்வைட்களை QR Code மூலம் அனுப்ப இயலும். க்ரூப் செட்டிங்ஸ் மெனுவில் இந்த வசதி உள்ளது. இந்த கோடின் நடுவே சிறிய டெலிகிராம் லோகோ இருக்கும். அதே போல் கிரரோப் இன்வைட்கள் சில நாட்களில் எக்ஸ்பயர் ஆவது போலவும் மாற்ற முடியும். ஒரு லிங்க் மூலம் குறிப்பிட்ட அளவிலான நபர்கள் மட்டுமே சேரும் மாதிரியும் செய்ய இயலும்.
தகவல்களை பற்றி புகார் – Telegram App
செயலியில் பகிரப்படும் தகவல்களை இனி ரிப்போர்ட் செய்யலாம். டெலிகிராம் செயலியின் மட்டுறுத்துனர்களுக்கு இந்த ரிப்போர்ட் செல்லும். அதன் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றி இப்பொழுது தகவல்கள் எதுவும் இல்லை.
தானாக அழியும் செய்திகள்
ஏற்கனவே இந்த வசதி சிக்னல் மற்றும் வாட்ஸ் அப் செயலிகளில் உள்ளது. டெலிகிராம் க்ரூப்களில் க்ரூப் நிர்வாகி 24 மணி நேரத்திலோ அல்லது 7 நாட்களிலோ அனுப்பும் செய்திகள் அழிவது போல் அமைக்க முடியும். போக போக எத்தனை மணி நேரத்தில் அழிக்கலாம் என்பதில் மேலும் பல வசதிகள் வரலாம்.
டெலிகிராம் விட்ஜெட்
இந்த வசதி மூலம் சில சாட்களையோ அல்லது சேனல்களையோ டெலிகிராம் விட்ஜெட்டாக வைத்துக் கொள்ளலாம். இதுவும் இப்பொழுதைக்கு பீட்டாவில் மட்டுமே உள்ளது.
இந்த வசதிகள் Telegram app பயனாளர்கள் அனைவருக்கும் வர இன்னும் சிறிது காலம் ஆகும். அதுவரை பொறுத்திருக்கவும்.