” Threads by Instagram ” இது ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய செயலி. ஏற்கனவே சமூக வலைத்தள செயலிகளில் பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் ,வாட்ஸ் அப் என தனக்கென தனி இடம் பிடித்திருந்தாலும் தனது இருப்பை அதிகப்படுத்திக் கொள்ள இவர்கள் இந்த செயலியை உருவாக்கியுள்ளனர்.
Threads by Instagram
- இந்த செயலியில் நீங்கள் சேர , உங்களுக்கு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்க வேண்டும். இதற்கென தனி கணக்கை உருவாக்க இயலாது. ஏற்கனவே இன்ஸ்டாகிராம் கணக்கு இருந்தால் சேர்ந்து கொள்ள இயலும். அதே போல் , இன்ஸ்டாவில் என்ன உபயோகிப்பாளர் பெயர் உள்ளதோ அதையேதான் இங்கும் உபயோகிக்க முடியும்.
- Threads by Instagram செயலியில் உங்கள் அக்கவுண்ட் வேண்டாம் என்றால் தாற்காலிகமாகத்தான் நீக்க இயலும். நிரந்தரமாய் நீக்க வேண்டும் என்றால் உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கையும் நீக்க வேண்டும்.
- பேஸ்புக் / இன்ஸ்டாகிராம் போன்றே இங்கும் விளம்பரங்கள் அதிகம் வரும். அதற்கு வழக்கம்போல் உங்கள் தரவுகள் சேகரிக்கப்படும்.
UI & உபயோகிப்பது
நீங்கள் ட்விட்டர் உபயோகித்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு இதை உபயோகிப்பதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது. ஏனென்றால் ட்விட்டரின் UI அப்படியே காப்பி அடிக்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் லைக் / ரீ ட்வீட் வசதி முதற்கொண்டு அப்படியே கொண்டுவரப்பட்டுள்ளது.
ட்விட்டரில் 280 வார்த்தைகள் உபயோகிக்க முடியும். இங்கே 500 வார்த்தைகள் வரை உபயோகிக்கலாம். அதே போன்று ஐந்து நிமிடம் ஓடும் வீடியோக்கள் பகிர இயலும். மற்றபடி ட்விட்டர் தான். பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.
ட்விட்டருக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதில் பகிரப்படும் படங்களை சேமிக்க இயலாது. ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம். வீடியோக்களும் சேமிக்க இயலவில்லை. கண்டிப்பாக சில செயலிகள் இதெற்கென வரும். அப்பொழுது இந்த பிரைவசி ஆப்ஷன் அடிபட்டு போய் விடும்.
இது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை அடிப்படையாக கொண்டு இயங்குவதால் முதல் நாளிலேயே அதிக பயனாளர்கள் இருப்பதோ சிலருக்கு ஒரே நாளில் அதிக பாலோவர் வந்ததோ வியப்பில்லை. ஏனென்றால் இதில் இணைந்து யாராவது பதிவு போட்டால் இன்ஸ்டாவில் அவர்களை பின்தொடர்பவர்களுக்கு மெசேஜ் போகிறது அவர்களையும் இணைய சொல்லி. எனவே அதிக பயனாளர்கள் / பின்தொடர்பவர்கள் என்பது இதில் ஒரு வகையில் பொய்.
அடுத்து, முதல் நாளிலேயே ட்விட்டர் மெட்டா நிறுவனத்திற்கு இந்த செயலி மற்றும் ஐடியா ட்விட்டரில் இருந்து திருடப்பட்டதாக கூறி நோட்டிஸ் அனுப்பி உள்ளது. வரக்கூடிய நாட்களில் இது வழக்காக மாறி பரபரப்பு கூடலாம். மெட்டா நிறுவனத்தை பொறுத்தவரை அவர்களது விளம்பர வருமானத்தை கூட்ட மற்றுமொரு வாய்ப்பு.
சில ஸ்க்ரீன்ஷாட்ஸ்
இந்த செயலியை இன்ஸ்டால் செய்ய