கடந்த மே மாதம், வாட்ஸ் அப் செயலி, விண்டோஸ் 11க்கான செயலியில் சில சாட் பில்டர்களை அறிமுகப்படுத்தி இருந்தது. அதே அடிப்படையில் இப்பொழுது அதன் ஆண்டிராய்டு செயலியிலும் புதிய பில்டர் வசதியை கொண்டுவந்துள்ளது. ” Unread Chat filter ” ஆண்டிராய்டு செயலியிலும் விண்டோஸ் செயலியிலும் வேலை செய்யும் விதம் வேறுபடுகிறது. அதை பிறகு பார்ப்போம்.
Unread Chat filter வேலை செய்யும் விதம்
ஆண்டராய்டுக்கான வாட்ஸ் அப் செயலியில் முகப்பில், மேலே மெசேஜ்களை தேட இருக்கும் ஐக்கானை கிளிக் செய்தால், எத்தகைய மெசேஜ்களில் தேட வசதி இருக்கும். அதை சொடுக்கினால், உங்களுக்கு கீழ்கண்ட பில்டர் ஆப்ஷன்கள் காட்டும். அதில் ” Unread ” என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும் . பிறகு தேட வேண்டியதை தேடிக் கொள்ளவும்.
ஏற்கெனவே விண்டோஸ் 11க்கான செயலியில் இந்த வசதி உள்ளது. ஆனால் அதில் நேரடியாக பில்டர் செய்ய வசதி உள்ளது. ஆனால் மொபைல் செயலியில் அத்தகைய ஆப்ஷன்கள் இல்லை. எனவே மெசேஜ் தேடும் இடத்தில் தான் இந்த ஆப்ஷனை வைக்க வேண்டி உள்ளது.