Updates regarding Messenger,whatsapp and Instagram

Facebook Messenger

ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியில் ஐந்து பேருக்கு மேல் ஒரே சமயத்தில் எந்த பார்வேர்டும் பண்ண இயலாது. இப்பொழுது பேஸ்புக் மெசஞ்சருக்கும் அந்த வசதியை கொண்டுவந்துள்ளது பேஸ்புக் நிறுவனம். இந்த வருட இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி அதிகமாக போலி செய்திகள் பரப்பப்படாமல் இருக்க இந்த வசதியை கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரே நேரத்தில் அனைவருக்கும் அப்டேட் ஆகாது. அதிகபட்சம் இரு வாரத்திற்குள் அனைவருக்கும் இந்த அப்டேட் கிடைக்கலாம்.

Whatsapp Messenger

இனி வாட்ஸ்அப் சம்பந்தப்பட்ட செக்யூரிட்டி விஷயங்கள், ஏதாவது பாதுகாப்பு குறைப்பது உள்ளதா போன்றவற்றை அந்நிறுவனத்தின் பிரத்யேக இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். இதற்காக தனியாக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

இந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட ஆறு பாதுகாப்பு குறைபாடுகளில் ஐந்து ஒரே நாளில் சரிசெய்யப்பட்டது. மீதமிருந்த ஒரே பிரச்சனையும் சில நாட்களில் சரி செய்யப்பட்டது.

https://www.whatsapp.com/security/advisories

Instagram

இன்ஸ்டாக்ராம் ரீல்ஸ் என்ற வீடியோ போடும் வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இப்பொழுது தனது செயலியில் இந்த ரீல்ஸ் வீடியோ பார்க்கவென தனியாக டேப் கொண்டுவந்துள்ளது. கீழே உள்ள படத்தை பார்க்க. டிக்டாக் போனால் சிலர் திருந்த நினைத்தாலும் இவர்கள் விடமாட்டார்கள் போல.

Messenger,whatsapp and Instagram

About Author