நம்மில் பலரும் உபயோகிக்கும் மெயில் பொதுவாய் ஜிமெயில்தான். ஆனால் பலர் ஜிமெயில் மட்டுமின்றி மைக்ரோசாஃப்ட்டின் அவுட்லுக் , யாஹூ மெயில் போன்றவற்றிலும் ஒரு ஐடி வைத்திருப்பார்கள். சிலர் ஜிமெயிலில் குறிப்பிட்ட சில விஷயங்கள், அதே போன்று யாஹூவில் சில விஷயங்கள் என்று பிரித்து உபயோகிப்பார்கள். முன்பு கணிணியில் ஒரு விண்டோ ஓபன் செய்து அனைத்தையும் பார்க்கலாம். இப்பொழுது ஸ்மார்ட் மொபைல் எனும் பொழுது ஒவ்வொன்றிற்கும் தனித்தனி செயலிகள் இன்ஸ்டால் செய்ய வேண்டியுள்ளது. இதை எளிதாக தவிர்த்து ஜிமெயில் செயலி மூலமே நீங்கள் மற்ற மெயில்களையும் படித்து அவற்றிற்கு பதிலும் அளிக்க முடியும். எப்படி Gmail App மூலம் இதை செய்யலாம் என பார்ப்போம்.
உங்கள் மொபைலில் gmail app ஓபன் செய்யவும்
வலது மேல் மூலையில் உங்கள் ப்ரொபைல் படத்தை டச் செய்யவும்.
இப்பொழுது வரும் பாப் அப் மெனுவில் “Add Another account” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
இப்பொழுது ” Set up mail ” என்ற ஆப்ஷன் வரும்.
இதில் நீங்கள் எந்த மெயில் ஐடி இதில் வேண்டுமோ ( யாஹூ / அவுட்லுக் / ஹாட்மெயில்) தேர்வு செய்யவும்
அடுத்து அந்த அக்கவுண்டில் லாகின் செய்ய சொல்லும் ( யாஹூ / அவுட்லுக் etc )
பின் ஜிமெயில் செயலிக்கு அந்த மெயில்களை படிக்க / பதிலளிக்க பெர்மிஷன் தரவும்.
இனி உங்கள் gmail app ல் இருந்தே மற்ற மெயில்களை படிக்க / பதிலளிக்க முடியும்.
இதுவே நீங்கள் POP3 மெயில் உபயோகம் செய்தால் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும். ( உதாரணம் : support@cswebservices.in)
உங்கள் மொபைலில் ஜிமெயில் செயலியை ஓபன் செய்யவும்
வலது மேல் மூலையில் உங்கள் ப்ரொபைல் படத்தை டச் செய்யவும்.
இப்பொழுது வரும் பாப் அப் மெனுவில் “Add Another account” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
இப்பொழுது ” Set up mail ” என்ற ஆப்ஷன் வரும்.
இதில் Other என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
அதன் பிறகு உங்கள் மெயில் ஐடியை டைப் செய்யவும்
பின் அந்த மெயில் ஐடியின் பாஸ்வேர்ட் டைப் செய்யவும்.
அடுத்த ஸ்க்ரீனில் அந்த மெயில் சர்வர் ( POP 3) டைப் செய்யவும். ( உதா : mail.cswebservices.in)
அடுத்த ஸ்க்ரீனில் அந்த மெயில் சர்வர் ( smtp ) டைப் செய்யவும். ( உதா : mail.cswebservices.in)
பின்பு எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை மெயில் சிங்க் செய்யணும் என்பதை தேர்வு செய்யவும். ‘