SIlently Exit whatsapp groups

End to End encrypted backups – Whatsapp

வாட்ஸ் அப் செயலி இந்தியாவில் பெரும்பாலோனோர் உபயோகம் செய்யும் செயலி. இந்த செயலியின் முக்கிய அம்சமாக பலரும் கருதுவது இதன் End to End encryption. அதாவது நீங்கள் அனுப்பும் மெசேஜ் / வீடியோ போன்றவை என்க்ரிப்ட் ஆகி செல்லும். நீங்கள் யாருக்கு அனுப்புகிறீர்களோ அவர்களை தவிர நடுவில் யாரும் இடைமறித்து பார்க்கஇயலாது. இதுதான் ஆதி காலத்தில் இருந்து வாட்ஸ் அப் நிறுவனம் சொல்லி வருவது. ஆனால், நீங்கள் பேக் அப் எடுக்கும் பொழுது வாட்ஸ் அப் அதை என்க்ரிப்ட் செய்வதில்லை. அதை அப்படியே கூகிள் ட்ரைவில் சேமித்து விடும் ( ஆன்ட்ராய்ட் எனில் ). இப்பொழுது பீட்டா பதிப்பில் வாட்ஸ் அப் நிறுவனம் புதிதாய் அறிமுகப்படுத்தி இருக்கும் வசதி End to End encrypted backups.

இந்த வசதியின் மூலம், இனி நீங்கள் பேக் அப் எடுக்கும் பொழுதே அதை என்க்ரிப்ட் செய்துகொள்ளலாம் அல்லது வேண்டாம் என்றால் சாதாரணமாய் பேக் அப் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் End to End encrypted backups எடுப்பதன் மூலம் உங்கள் தகவல்கள் பாதுகாப்பாய் இருக்கும். உங்கள் கூகிள் ட்ரைவ் ஹேக் ஆனாலும் பிரச்சனை வராது. எனவே அந்த வகையில் இந்த வசதி பயனுள்ளதே. இந்த வசதியை நீங்கள் எனேபிள் செய்யும் பொழுது இதற்கு ஒரு பாஸ்வேர்ட் கேக்கும். அந்த பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிட்டால், உங்கள் பேக் அப் டேட்டாவை ரீஸ்டோர் செய்ய இயலாது. எனவே கடினமான அதே சமயத்தில் உங்களால் எளிதில் நினைவு வைத்துக்கொள்ளக்கூடிய பாஸ்வேர்டை தேர்வு செய்யவும்.

இந்த வசதி இன்னும் பீட்டா சோதனையில்தான் இருக்கிறது. அனைத்து உபயோகிப்பாளர்களுக்கும் அப்டேட் வரவில்லை. இன்னும் சரியாக சொல்லவேண்டுமென்றால் , பீட்டா உபயோகிப்பாளர்களிலேயே பலருக்கு இன்னும் இந்த அப்டேட் வரவில்லை. எனவே அனைவருக்கும் இந்த அப்டேட் வர இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.

About Author

One Reply to “End to End encrypted backups – Whatsapp”

Comments are closed.