பொதுவாய் பல இணையத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்யவும் லாகின் செய்யவும் கூகிள் ஐடியை அனுமதிப்பார்கள். ஆனால் இவ்வளவு நாளாய் ட்விட்டர் அதை அனுமதிக்கவில்லை. சாதாரணமாய் இ மெயில் ஐடி மூலம் விவரங்களை கொடுத்துதான் பதிவு செய்யவோ அதன் பின் அதே இ மெயில் உபயோகித்தோ லாகின் செய்யவும் முடியும். இப்பொழுது அதை மாற்றி கூகிள் ஐடி மற்றும் ஆப்பிள் ஐடி மூலம் ரிஜிஸ்டர் செய்யும் வகையில் அனுமதி அளித்துள்ளனர்.” Use Google ID to login “ ஆப்ஷன் மூலம் எப்படி லாகின் செய்யலாம் என பார்ப்போம்.
நீங்கள் புதிய ட்விட்டர் ஐடி உருவாக்கினால் அதன் முகப்பில் இருக்கும் ” Sign up With Google” என்ற ஆப்ஷனை உபயோகப்படுத்தலாம். இதற்கடுத்த ஸ்க்ரீனில் உங்களுடைய கூகிள் ஐடியை தேர்வு செய்யவும். அதன் பின் வழக்கமான விவரங்களை கொடுத்து ஐடி கிரியேட் செய்துவிடலாம்.

ஏற்கனவே நீங்கள் ட்விட்டர் ஐடியை கூகிள் இ மெயில் ஐடி கொண்டு கிரியேட் செய்திருந்தால் அந்த கூகிள் ஐடி மூலம் லாகின் செய்யலாம். அதற்கு ட்விட்டரின் முகப்பில் லாகின் தேர்வு செய்யவும். பின் “Login With Google” ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

முதல் முறை கூகிள் ஐடி மூலம் லாகின் செய்யும் பொழுது , மீண்டும் உங்கள் விவரங்களை சரி பார்க்க சொல்லும். அதை முடித்தவுடன் வழக்கம் போல் ட்விட்டரை உபயோகிக்கலாம்.