Vishing Scam targets Gmail users

இ மெயில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து ஸ்பேம் மெயில்களும் / மெயில் ஸ்கேம்களும் இருந்து கொண்டேதான் உள்ளன. ஆனால் காலத்திற்கேற்றவாறு அவர்களும் தங்களை மாற்றிக் கொண்டே செல்கின்றனர். புது புது வகைகளில் உபயோகிப்பாளர்களை ஏமாற்ற முயல்கின்றனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்று விடுகின்றனர் என்றே சொல்லவேண்டும். இந்த வகையில் இப்பொழுது புதிதாய் “Vishing Scam” ஒன்று ஆரம்பித்துள்ளனர்.

எவ்விதம் நடக்கிறது Vishing Scam ?

இந்த Vishing Scam மிக மிக எளிமையான முறையில் செய்கிறார்கள். உங்கள் ஜி மெயில் ஐடிக்கு அமேசானிலோ அல்லது வேறு ஏதாவது பிரபலமான இணையதளத்தில் இருந்தோ நீங்கள் பொருளை வாங்கியது போன்று மெயில் வரும். ஆனால் அந்த மெயிலில் ஆர்டரை கேன்சல் செய்ய எந்த ஒரு வழியும் இருக்காது. அவர்களை அழைக்க ஒரே ஒரே எண் மட்டும் தரப்பட்டிருக்கும். நீங்களும் வேறு வழியின்றி அந்த எண்ணுக்கு அழைப்பீர்கள்.

அந்த எண்ணை நீங்கள் அழைத்தால் உண்மையான நபர் பேசுவார். ஆர்டர் கேன்சல் செய்வது போல் உங்கள் விவரம், வாங்கி விவரம் போன்றவை கலெக்ட் செய்யப்படும். உங்கள் நேரம் சரி இல்லையென்றால் ஏதாவது ஒரு எண்ணுக்கு குறிப்பிட்ட தொகை அனுப்பினால்தான் ஆர்டர் கேன்சல் செய்யப்படும் என சொல்வார்கள். இதுதான் இந்த Vishing Scam செயல்படும் விதம்.

எப்படி Vishing Scam ஐ தவிர்ப்பது ?

  1. நீங்கள் ஆர்டர் செய்யாமல் , இத்தகைய ஆர்டர் மெயில்கள் வந்தால் கண்ணை மூடிக் கொண்டு டெலீட் செய்யவும்.
  2. புதிய மெயில் ஐடியில் இருந்து வரும் லிங்க்-ஐ க்ளிக் செய்ய வேண்டாம்.

About Author