நாம் பிரவுசரில் ஏதோ ஒரு விஷயம் தொடர்பாய் இணையதளங்களை தேடும்பொழுது அதற்கு சம்பந்தம் இல்லாத தளங்களும் தேடுதல் முடிவுகளில் காட்டப்படும். சிலசமயம் அந்த தளங்களின் பெயர் நாம் தேடுவதற்கு சம்பந்தமாய் இருக்கலாம் ஆனால் அந்த ஓபன் செய்தால் சம்பந்தமில்லாத விஷயமாய் இருக்கும். சில சமயம் சில ஆட்வேர் தளங்கள் ஓபன் ஆகும். இனி உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இருந்து இணையதளங்களை தேடும் பொழுது இந்த மாதிரி பிரச்சனைகளை தவிர்க்க கூகிள் க்ரோம் பிரவுசரில் “Website Preview” என்ற ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளனர். எப்படி இதை செய்யலாம் என பார்க்கும் முன் உங்கள் க்ரோம் பிரவுசரை அப்டேட் செய்து கொள்ளவும். இந்த வெர்ஷன் இருக்கிறதா என சரி பார்த்துக்கொள்ளவும்
Website Preview எப்படி உபயோகம் செய்வது ?
இப்பொழுது எந்த தளத்தை / விஷயத்தை தேடவேண்டுமோ அதை கூகிள் பிரவுசரில் , கூகிளில் சென்று டைப் செய்யவும். இதன் பின் வரும் தளங்களில் எதோ ஒரு தளத்தின் இணைப்பில் ரைட் க்ளிக் செய்யவும். அதில் வரும் “Preview Page” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். இப்பொழுது உங்கள் பிரவுசரின் அதே பக்கத்தில் அந்த தளத்தின் பிரிவியூ வரும்.அதை பார்த்துவிட்டு அந்த தளத்தை ஓபன் செய்வதா வேண்டாமா என முடிவு செய்துகொள்ளலாம்.