Whatsapp Reactions available for all

பேஸ்புக்கில் வரும் பதிவுகளுக்கும் கமெண்ட்களுக்கும் எப்படி பல ரியாக்ஷன் தர இயலுமோ அப்படி வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்களுக்கும் இனி நீங்கள் ரியாக்ஷன் தர இயலும். இது வெகு நாளாய் சோதனையில் இருந்தது. நேற்று மார்க் ஜூக்கர்பெர்க் Whatsapp Reactions வசதி அனைவருக்கும் இன்று முதல் கிடைக்கும் என்று அறிவித்திருந்தார். பீட்டா சோதனையாளர் என்பதால் நேற்று இந்த வசதி வந்திருந்தது. ஆனால் அனைவருக்கும் இந்த வசதி வர அதிகபட்சம் ஒரு வாரம் ஆகும். எதற்கும் ஒரு முறை அப்டேட் இருக்கிறதா என பார்த்து அப்டேட் செய்துவிட்டு, இந்த வசதி வந்துள்ளதா என பார்க்கவும். இந்த ஆன்ட்ராய்ட் , ஐ ஓ எஸ் மற்றும் விண்டோஸ் டெஸ்க் டாப் என்று அனைத்து பதிப்புகளுக்கும் பொருந்தும்.

How to add Whatsapp Reactions

  1. க்ரூப் மெஸேஜோ இல்லை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் வந்த மெஸேஜோ இரண்டிற்கும் நீங்கள் இந்த ரியாக்ஷன் எமோஜி சேர்க்க முடியும்.
  2. எந்த மெசேஜிற்கு ரியாக்ட் பண்ண விரும்புகிறீர்களோ அந்த மெசேஜை அழுத்தவும்.
  3. இப்பொழுது ஆறு எமோஜி காட்டும். இது ஏற்கனவே பேஸ்புக்கில் இருக்கும் எமோஜி தான். ஆனால் கோப எமோஜி இன்னும் வரவில்லை.
  4. எந்த எமோஜி வேண்டுமோ அதை தொடவும்
  5. இப்பொழுது அந்த மெசேஜின் இடது கீழ் பக்கம் எமோஜி காட்டும்.
Whatsapp Reactions
Whatsapp Reactions

இந்த வசதி உங்களுக்கு வந்துள்ளதா என சோதித்து பார்த்து கமெண்டில் சொல்லவும்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.