Whatsapp : Upcoming Changes

நாம் அனைவரும் அதிகம் பயன்படுத்தும் Whatsapp செயலியில் அடுத்து வரப்போகும் சில வசதிகளை பற்றி பார்ப்போம்

Expiring Messages:

இதை பற்றி ஏற்கனவே நான் எழுதி இருந்தேன். அனுப்பிய பின் சில நிமிடங்கள் அல்லது நாட்களில் அழியும் படி செட் செய்துவிடலாம். அதன்படி அது தானாக அழிந்து விடும். இது இன்னும் சோதனையில் உள்ளது. எப்பொழுது வரும் என்று இன்னும் அறிவிப்பு வரவில்லை

Whatsapp Pay

இதுவும் ஏற்கனவே நான் கூறிய ஒன்று. அநேகமாய் சோதனைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. இது ஏற்கனவே whatsapp beta பயனாளர்களுக்கு வந்து விட்ட ஒன்று. மற்ற அனைவர்களுக்கும் NCPI அனுமதி கிடைத்தவுடன் அப்டேட் வந்துவிடும்

Customizable Wallpapers

இப்பொழுது whatsappஇல் வால்பேப்பர் செட் செய்தால் அனைத்து சாட் விண்டோக்களிலும் அதுதான் இருக்கும். இதை மாற்றி ஒவ்வொரு விண்டோவிற்கும் ஒவ்வொரு வால்பேப்பர் செட் செய்து கொள்ளும் வசதி விரைவில் வரவிருக்கிறது.

PIP support for ShareChat videos

இப்பொழுது யூ டியூப் விடீயோக்களை வாட்ஸ்அப்பில் இருந்து வெளியே செல்லாமல் பார்க்கும் வசதி உள்ளது. அதே போன்று sharechat செயலுக்கும் விரைவில் வர இருக்கிறது.

Search the Web

வாட்ஸ் அப்பில் வரும் செய்திகள் / வீடியோக்களை சரி பார்க்க விரும்பினால் நேரடியாக செயலியில் இருந்தே பிரவுசரில் தேடும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுதைக்கு இது பிரேசில், அமெரிக்கா, இத்தாலி, அயர்லாந்து, இங்கிலாந்து, மெக்சிகோ ஆகிய நாடுகளில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு விரைவில் இந்த வசதி வந்தால் பரவாயில்லை. பல போலி செய்திகளை கண்டறிந்து கொள்ளலாம்.

About Author