சென்ற வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனம் , விண்டோஸின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 11 ஐ அறிமுகப்படுத்தியது. இந்த வருட இறுதியில்தான் அனைத்துப் பயனாளர்களுக்கும் விண்டோஸ் அப்டேட் வரும் என்றாலும், டெஸ்டர்களுக்கு என்று முன்கூட்டியே அப்டேட் வரும். ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வகையில் பெயரிடுவார்கள். சிலர் ஆல்பா டெஸ்டர் / பீட்டா டெஸ்டர் என்று வைத்திருப்பர்கள். மைக்ரோசாஃப்டை பொறுத்தவரை இந்த டெஸ்டிங் ப்ரோக்ராமை ” Windows Insider Program” என்று அழைக்கிறார்கள். இந்த இன்சைடர் ப்ரோக்ராமில் கீழே உள்ள படத்தில் இருப்பது போன்றுதான் வரிசையாக அப்டேட் வரும். Windows 10 to Windows 11 Upgrade ம் இந்த வரிசையில்தான் வரும்.
இன்று காலை அப்டேட் வந்தது. அப்டேட் ஓடி இன்ஸ்டால் ஆக சில மணி நேரம் ஆகியது. முதல் முறை லாகின் ஸ்க்ரீன் தாண்டி சென்றவுடன் வெறும் கருப்புத் திரைதான் வந்தது. அங்கிருந்து ஷார்ட் கட் கீ மூலம் எல்லா வேலைகளும் செய்ய முடிந்தது. ஆனால் டெஸ்க்டாப் ஸ்க்ரீன் வரவே இல்லை. டெஸ்க்டாப் வந்தால்தான் செட்டிங்ஸ் வரும். அதன் மூலம்தான் அப்டேட் ரிவர்ஸ் செய்ய இயலும்.
வேறு வழி தெரியாமல் ரீ ஸ்டார்ட் செய்து bios ஸ்க்ரீன் சென்றேன். அங்கே ஒரு மாற்றம் செய்தேன். விண்டோஸ் 11 இன்ஸ்டால் செய்ய TPM தேவைப்பட்டது. அதை தேர்வு செய்தபொழுது அதன் கீழே இருந்த “TPM State ” என்ற ஆப்ஷனையும் தேர்வு செய்திருந்தேன். இப்பொழுது அதை “disable” செய்து ரீபூட் செய்தேன்.
இந்த முறை எந்த பிரச்னையும் இன்றி லாகின் செய்து விண்டோஸ் 11 டெஸ்க் டாப் வந்துவிட்டது. Windows 11 டெஸ்க் டாப் ஆப்பிள் நிறுவனத்தின் Mac கணிணிகளில் இருக்கும் டெஸ்க் டாப் போன்று வடிவமைத்துள்ளார்கள். இடது ஓரத்தில் இருந்த ஸ்டார்ட் மெனு இப்பொழுது ஸ்க்ரீனின் நடுவிற்கு வந்துள்ளது. அதே போல் ஸ்டார்ட் மெனுவிலும் நிறைய மாற்றங்கள் கொண்டுவந்துள்ளனர். இது அப்டேட் ப்ராசஸ் என்பதால் புதிதாய் மீண்டும் எதையும் இன்ஸ்டால் செய்ய வேண்டியில்லை. அப்படியே தொடர்ந்து உபயோகிக்க இயல்கிறது.
விண்டோஸ் 11 பூட் செய்து டெஸ்க் டாப் ஸ்க்ரீன் வர 38ல் இருந்து நாற்பது வினாடிகள் ஆகிறது எனது கணிணியில். விண்டோஸ் 10 பூட் ஆனதை விட வேகமாய் இருப்பது போல் ஒரு தோற்றம். உண்மையா இல்லையா என்பது சில வாரங்களில் தெரிந்து விடும்.
செட்டிங்ஸ் ஸ்க்ரீன் முழுவதுமாய் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் புதிதாய் widgets சேர்க்கப்பட்டுள்ளது. விண்டோஸ் ஸ்டோர் UI மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொன்றை பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
சில ஸ்க்ரீன் ஷாட் மட்டும் இங்கே