Windows 11 Build 22000.100 KB5004300

விண்டோஸ் 11 dev channel லில் ரிலீஸ் செய்ததில் இருந்து இப்பொழுது நான்காவது அப்டேட் வந்துள்ளது. இந்த முறை வந்துள்ள அப்டேட் பில்ட் நம்பர் Windows 11 Build 22000.100 KB5004300. KB5004745  அப்டேட்டில் வந்தது போல் புதிதாய் எந்த வசதிகளும் இதில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த அப்டேட்டில் அவர்கள் முக்கியமாய் கவனம் செலுத்தியிருப்பது விசுவல் மாற்றங்களில் மட்டுமே. எனவே ஆண்டிராய்டு செயலி சப்போர்டிற்கு இன்னும் காத்திருக்க வேண்டும். இந்த Windows 11 Build 22000.100 KB5004300 வந்துள்ள சிறு சிறு மாற்றங்களை பார்ப்போம். இந்த அப்டேட்டுடன் விண்டோஸ் defender க்கு உண்டான அப்டேட்டும் வந்துள்ளது. அது விண்டோஸ் 10 சிஸ்டம் வைத்திருப்பவர்களும் அப்டேட் செய்யலாம்.

டாஸ்க் பாரின் வலது பக்கம் இருக்கும் சிஸ்டம் ட்ரே யில் பொதுவாய் இரண்டு அல்லது மூன்று ஐகான் மட்டுமே காட்டும். மற்ற ஐகான்களை பார்க்க அங்கிருக்கும் சிறிய ஏரோ ஐகானை அழுத்த வேண்டும். அப்பொழுது சிஸ்டம் ட்ரே விரிவாகி காட்டும். இந்த சிஸ்டம் ட்ரே மற்ற flyout விண்டோக்களை போலவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

PC:windowslatest.com

அடுத்த மாற்றம், நீங்கள் பல்வேறு ப்ரோக்ராம் ஓபன் செய்து வேலை செய்துகொண்டிருப்பீர்கள். உதாரணத்திற்கு அவுட்லுக் , க்ரோம் மற்றும் சில. இப்பொழுது இந்த அப்டேட் செய்தபின் புதிதாய் ஒரு மெயில் வருகிறது என்றால், அவுட்லுக் ஐகான் டாஸ்க் பாரில் பிளாஷ் ஆகும். அதிகம் உறுத்தாத வகையில் நீங்கள் அதை ஓபன் செய்யும் வரை பிளாஷ் ஆகும். கீழே படத்தில் க்ரோம் பிரவுசரின் உதாரணம் காட்டியுள்ளேன்.

Windows 11 Build 22000.100 KB5004300

அடுத்த அப்டேட் , முன்பு கேலண்டரை க்ளிக் செய்தால் நோட்டிபிகேஷனும் கேலண்டரும் விரிவாக காட்டும். அதை இப்பொழுது மாற்றி கேலண்டரை minimize மோடில் காட்டி உள்ளார்கள். இதனால் நோட்டிபிகேஷனுக்கு அதிக இடம் கிடைக்கிறது. இந்த நோட்டிபிகேஷனையும் நீங்கள் செட்டிங்ஸ் விண்டோவில் மாற்றிக் கொள்ளலாம்.

Windows 11 Build 22000.100 KB5004300
Windows 11 Build 22000.100 KB5004300

விண்டோஸ் ஸ்டோரில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக அப்டேட் லாக் காட்டுகிறது. ஆனால் விசிபிலாக தெரியவில்லை. அதை சரிபார்த்துவிட்டு தனியாக எழுதுகிறேன். இதை தவிர , ஏற்கனவே இருந்த பிரச்சனைகளில் சிலவற்றை சரி செய்துள்ளார்கள்.

Here’s a list of other improvements in Build 22000.100 (KB5004300):

  • Microsoft has resolved an issue that crashes Explorer.exe when you click on the date and time button on the taskbar. This problem was experienced on devices where the Focus Assist feature is turned off.
  • Microsoft is bringing back icons for some context menu entries.
  • A bug has been fixed where the taskbar clock loses Windows sync support and gets stuck.
  • A bug has been fixed where explorer.exe could resume the device from standby
  • You can now click on the Taskbar to close Start or Search. This feature was missing in original builds.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.