Choosing default browser

Windows 11 Build 22509

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஆண்டு மத்தியில் விண்டோஸ் 11 ஐ அறிமுகப்படுத்தியது. முதலில் பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் கிடைத்த இந்த இயங்குதளம், அக்டோபர் இறுதி வாக்கில் அனைவருக்கும் அப்டேட் மூலம் கிடைத்தது. இன்னும் அனைவருக்குமான ரோல் அவுட் முடியவில்லை. இது ஒருபுறம் இருக்க, விண்டோஸ் 11 தொடர்ந்து பல புதிய விஷயங்களும் / இருக்கும் வசதிகளை இன்னும் மேம்படுத்துவதும் நடந்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்த வார அப்டேட்டான Windows 11 Build 22509 குறிப்பாக ஸ்டார்ட் மெனு வில் புதிய சில செட்டிங்ஸ்ஸில் கவனம் செலுத்தி இருக்கிறது. இந்த அப்டேட்டுக்கு முன்பு இருந்தது கீழே படத்தில்

இதில் இந்த லே அவுட் மாற்றவே முடியாத ஒன்றாக இருந்தது. விண்டோஸ் செயலிகள் 3 ரோ பிறகு சமீபத்தில் உபயோகப்படுத்திய கோப்புகள் என்பது நிரந்தரமாக இருந்தது. இப்பொழுதைய புதிய அப்டேட்டில் இதை மாற்றுவதற்கு வசதிகள் கொடுத்துள்ளனர். ஸ்டார்ட் மெனு செட்டிங்ஸ் செல்ல இரண்டு வழிகள் உள்ளன.

  1. வழக்கமான ஸ்டார்ட் மெனுவை க்ளிக் செய்து அதில் உள்ள செட்டிங்ஸ் ஐகான் க்ளிக் செய்து பின் , “Personalization ” சென்று அங்கிருந்து “Start” ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இல்லையெனில் ஸ்டார்ட் மெனுவை ஓபன் செய்து அதில் ரைட் க்ளிக் செய்தால் ““Start Settings” வரும். அதை க்ளிக் செய்தும் போகலாம். இதன் ஸ்க்ரீன் ஷாட்
Windows 11 Build 22509

ஸ்டார்ட் மெனு செட்டிங்ஸ் மூன்று ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள்.

  1. Default: இப்பொழுது இருப்பது போலவே
  2. More Pins : இப்பொழுது இருப்பதை விட அதிக செயலிகளை காட்டும்
  3. More Recommendations : செயலிகள் லிஸ்ட்டை குறைத்துவிட்டு “Recommendations ” அதிகம் காட்டும். உங்களுக்கு எது வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த அப்டேட் பற்றிய மற்ற விஷயங்களை படிக்க

Windows 11 Build 22509

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.