Windows 365 – Cloud PC

Microsoft நிறுவனம் தனது அடுத்த கணினி இயங்குதளமான Windows 11 பற்றி அறிவித்ததோடு, Windows 365 எனும் Cloud PC பற்றியும் அறிவித்திருக்கிறது.

வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல், Windows 365 வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Business version மற்றும் Enterprise version மட்டுமே தற்போது வெளியிடப்பட உள்ளது, கூடிய விரைவில் Microsoft 365 போல, தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் இது நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

வணிக நோக்கத்துடனும், கல்வி நிறுவனங்களுக்கும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வீட்டிலிருந்தே பணிபுரியவும், கல்வி கற்கவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறது Microsoft.

Microsoft 365 தற்போது வணிக மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கொடுக்கப்படுகிறது. இதற்கு மாதாந்திர, அல்லது வருடாந்திரக் கட்டணங்கள் உண்டு. தற்போது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மாதம் சுமார் 600 ரூபாய்க்கு, office applicationsக்கான ஆறு licenceகளும், 6TB cloud storageம் கொடுக்கப்படுகிறது. இதேபோல் நாளை Windows 365 சேவைகளும் வழங்கப்படலாம்.

இதன் சாதகமான அம்சங்கள்:

  1. உயர் கட்டமைப்புத் திறன் கொண்ட நுண்செயலிகள், அதிகமான நினைவகம் போன்றவை கொண்ட கணினிகளை வாங்க தேவையில்லை. சாதாரண கணினிகளில் browser மூலம் உயர் கட்டமைப்புக் கணினியை நாம் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
  2. அதிக திறன் கொண்ட உயர் கட்டமைப்பு நுண்செயலிகளைக் குளிர்விக்கத் தேவைப்படும் சாதனங்கள் எதுவும் சாதாரண கணினிக்குத் தேவையில்லை, செலவுகள் குறைவு.
  3. சாதாரண கட்டமைப்பு கொண்ட, உதாரணத்திற்கு, dual core processor, 4 GB RAM, 1 TB storage கொண்ட ஒரு கணினியே பெரும்பான்மையான அலுவல் பணிகளுக்குப் போதுமானது. மொத்த விற்பனையில் 5000 ரூபாய்களுக்கு 1 Stick PC கிடைக்கும், அதுவே பெரும்பான்மையோருக்கு போதுமானதாக இருக்கும். Smart TVகளில் இருக்கும் browserஐக் கொண்டும் இந்த cloud PCயில் பணிபுரியலாம். இதை பயன்படுத்த நினைக்கும் நிறுவனங்கள், inbuilt browser கொண்ட monitorகளை மட்டும் வாங்கினால் போதுமானது. (Versatility).
  4. இந்த Windows 365 cloud PC எங்கு சென்றாலும் நம்முடனேயே வரும் என்பதால் தொடர்ந்து அலுவல் தொடர்பிலேயே இருக்கலாம், நம் கைபேசியில் கூட browser மூலம் இதனைப் பயன்படுத்தலாம். (Portability).
  5. நம்முடைய சொந்த கணினிகளில் தேவைப்படும் மென்பொருட்கள் பெரும்பாலும் Windows 365 உடன் வந்து விடுகிறது, பாதுகாப்பு மென்பொருட்கள் உட்பட.
  6. மென்பொருட்கள் மேம்படுத்தல் (updates) பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை, அவை தானாகவே செய்துகொள்ளும்.
  7. கணினிச் செயலிழப்பினால் ஏற்படும் தரவு இழப்புகள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

இவ்வளவு சாதகங்கள் இருந்தாலும் இதில் பாதகங்களும் இருக்கின்றன:

  1. மாதாந்திரக் கட்டணம் செலுத்தியாக வேண்டும். நமக்கு எந்த அளவிற்கு உயர் வகைக் கட்டமைப்பு கொண்ட கணினி தேவைப்படுகிறதோ, அந்த அளவிற்கு மாதாந்திர கட்டணங்களும் கூடிக்கொண்டே போகும்.
  2. இணைய இணைப்பு எப்போதும் நமக்கு இருக்க வேண்டும், உயர் கட்டமைப்பு கணினிகளுக்கு உயர் வேக இணைய இணைப்பு மிக அவசியம். உயர் வேக இணைய இணைப்புக்கு தற்போதைய நிலையில் கட்டணங்கள் அதிகம்.
  3. தனியுரிமை (privacy) பாதிக்கப்பட வாய்ப்புகள் மிக அதிகம், ஏற்கனவே நம்மை பெருநிறுவனங்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றன, நாம் எங்கே செல்கிறோம் என்பதிலிருந்து என்ன பேசிக் கொள்கிறோம் என்பது வரை பெருநிறுவனங்களின் காதுகளுக்கு எட்டி விடுகிறது. இதில் ஒரு நிறுவனம் நம் தரவுகள் அனைத்தையும் சேமித்து வைத்துக் கொள்ளும் எனும் பொழுது முழுமையாக நம்மை அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்து விடுகிறோமோ என்கிற அச்சமும் வருகிறது. ஏற்கனவே One Drive cloud storage பயன்படுத்துவர்களின் அனைத்து தரவுகளும் Microsoft நிறுவனத்திடம் தான் இருக்கிறது. Google drive பயன்படுத்துவர்களின் தரவுகள் Google நிறுவனத்திடம் இருக்கிறது!

தனி உரிமை பற்றிப் பெரிதாக கவலைப்பட இனி ஒன்றுமில்லை, நம்மைப் பற்றி முழுமையாக இப்போது பெருநிறுவனங்களுக்கு தெரிகிறது.
சாதாரணமாக பாரில், “பணம் இல்ல டா, கொஞ்சம் கம்மியா இருக்கு”, என்று நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் சில வங்கிகளிடமிருந்து, தனிநபர் கடன் பற்றிய SMSகள் வருகின்றன! மறுநாள் தொலைபேசி அழைப்புகளும் வருகின்றன, கூடவே credit cardகளின் கடன் வரையறையை அதிகப்படுத்திக் கொள்ளலாம், இந்த numberக்கு அழைக்கவும் என்றும் SMSகள் வருகின்றன.

IRCTCயில் பெங்களூருக்கு ticket பதிவு செய்தால், பெங்களூரில் இருக்கும் தங்கு விடுதிகள் பற்றிய விளம்பரங்கள் Facebook timelineல் வருகின்றன.
தனியுரிமை தவிர்த்துப் பார்த்தால், Windows 365 போன்ற வசதிகள் வரவேற்புக்குரியது. மேலும், இவை licence இல்லாமல் மென் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கும். Licenced software தான் என்றுமே பாதுகாப்பானது. (Open source கதை வேறு, அதுவும் வரவேற்கத்தக்கதே).

சீன கம்யூனிஸ்ட் கட்சி விளையாடிய வைரஸ் விளையாட்டால் உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அலுவலக வேலைகளை வீட்டிலேயே செய்வது முதல், வீட்டிலேயே கல்வி கற்பது வழியாக… இனி, மென்பொருட்கள் பயன்பாடு விரை முழுமையான மாற்றங்களை உலகம் எதிர்கொள்ளும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.