சமீபகாலமாக பேஸ்புக் உபயோகிக்கும் பலருக்கும் கீழே கொடுத்திருக்கும் படத்தில் இருப்பது போல் ஒரு மெயில் பேஸ்புக்கில் இருந்து வந்துள்ளது. எனக்கும் இப்படி ஒரு மெயில் / நோட்டிபிகேஷன் வந்தது. “Your account needs advanced security” என்ற தலைப்பில் இந்த மெயில் வரும். இதை கண்டு யாரும் பதற்றமோ / அச்சமோ அடையத் தேவையில்லை. இது ஸ்பேம் மெயில் அல்ல. பேஸ்புக் அனுப்பும் மெயில் தான். உங்களுடைய அக்கௌன்ட்டை மேலும் பாதுகாப்பானதாக ஆக்க சில வழிமுறைகளை செய்ய சொல்லி இந்த மெயில் அனுப்புகின்றனர். எப்படி இந்த பாதுகாப்பு நடைமுறையை செய்வது என இந்த பதிவில் பார்ப்போம்.
இந்த ““Your account needs advanced security” எதற்கு என்றால் நீங்கள் வழக்கமாய் உபயோகப்படுத்தும் மொபைல் / கணிணி இல்லாமல் வேறு ஒரு டிவைஸில் இருந்து லாகின் பண்ண முயன்றால் உங்களுக்கு தகவல் வரும். மேலும் அவர்களை ” Code ” என்டர் பண்ண சொல்லும். எனவே உங்கள் அக்கவுண்ட் ஹேக் ஆவதில் இருந்து தவிர்க்கலாம்.
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பேஸ்புக் செயலியை ஓபன் செய்யவும்.
வலது மேல் பக்கம் உள்ள மூன்று கோடுகளை தொடவும்
மெனுவில் இருந்து “Settings / Privacy ” என்ற தலைப்பின் கீழே “Settings” ஆப்ஷனை தேர்வு செய்யவும்
அதன் பின் ” Password and Security “ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்
அடுத்து “ Check Your Important Security settings” தேர்வு செய்யவும்
இப்பொழுது உங்கள் பாஸ்வேர்ட் / Two Factor Aunthentication பற்றி காட்டும். எல்லாம் சரி என்றால் பச்சை கலர் டிக் காட்டும். இல்லையெனில் “Two Factor Aunthentication” உபயோகிக்க சொல்லும்.
அதன் பின் கீழே இருக்கும் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும். நான் “SMS” தேர்வு செய்துள்ளேன்.