கூகிள் முன்பு கூகிள் ம்யூசிக் என்ற பெயரில் இருந்த செயலியை சென்ற வருடம் மாற்றி யூடியூப் ம்யூசிக் என்ற பெயரில் புதிய செயலியாக சேவைகளை தருகிறது. இந்த செயலியை பொறுத்தவரை இலவச மற்றும் கட்டண சேவை என்று இரு வகையான சேவைகள் உண்டு. இலவச சேவையில் விளம்பரம் வரும் அதே நேரம் பாட்டு கேக்க இந்த செயலியிலேயே இருக்க வேண்டும். கட்டண சேவையில் எந்த விளம்பரமும் வராது அதே போல் வேறு செயலிகளை உபயோகித்துக் கொண்டும் இந்த செயலியில் பாட்டுகள் கேக்க இயலும். கட்டண சேவையில் இப்பொழுது எந்த மாற்றமும் இல்லை. அதே நேரம் YouTube Music free services யில் இரண்டு மாற்றங்கள் உள்ளன. அவை என்ன என பார்ப்போம்.
Listen music in background
முதல் மாற்றமானது ஒரு பிரீமியம் சேவையை இந்த இலவச பயனர் திட்டத்தில் கூகிள் தரப்போகிறது. அதாவது இதுவரை இலவச திட்டத்தில் , யூடுப் ம்யூசிக் செயலி ஓப்பனில் இருந்தால் மட்டுமே கேக்க இயலும். அதை மாற்றி, நீங்கள் அந்த செயலியில் பாட்டை செலக்ட் செய்துவிட்டது வேறு செயலியை துவக்கி உங்கள் வேலையை தொடர்ந்து செய்யலாம். அப்பொழுதும் தொடந்து நீங்கள் பாட்டைக் கேக்க இயலும்.
Can’t watch Video in YouTube Music free services
இதுவரை யூடியூப் ம்யூசிக் செயலியிலும் வீடியோக்கள் பார்க்க இயன்றது. இனி இந்த செயலியில் நீங்கள் வீடியோவும் பார்க்க வேண்டுமென்றால் கட்டண சேவைக்கு மாற வேண்டும். YouTube Music இலவச சேவையை உபயோகித்தால் உங்கள் மொபைலில் உள்ள பாடல்களை மட்டும் கேக்க இயலும். இந்த மாற்றம் முதலில் நவம்பர் 3 முதல் கனடாவில் அமலுக்கு வருகிறது. அதை தொடர்ந்து மற்ற நாடுகளில் இது அமல்படுத்தப்படும் என கூகிள் நிறுவனம் கூறியுள்ளது.