வாட்ஸ் அப்,ஒரு காலத்தில் மெசஞ்சர் சேவையில் போட்டியே இல்லாமல் தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த இரு வருடங்களில் டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளின் வளர்ச்சியினால் போட்டி அதிகமாகிவிட்டது. அதனால் பல புதிய வசதிகளை கொடுத்தாக வேண்டியுள்ளது. WhatsApp beta for Android 2.21.22.3 பதிப்பில் Picture-in-picture வசதியில் புதிய கன்ட்ரோல் பார் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் Picture-in-picture பற்றி தெரிந்திருக்கும். அதாவது வீடியோ சிறிய ஸ்க்ரீனில் ப்ளே ஆகிக் கொண்டிருக்க நீங்கள் ஸ்க்ரீனில் மற்ற வேலைகளை செய்யலாம்.
ஏற்கனவே வாட்ஸ் அப் செயலியை விட்டு வெளியே செல்லாமல் யூட்யூப், இன்ஸ்டாக்ராம், பேஸ்புக் வீடியோக்களை இந்த வகையில் பார்க்க இயலும். இப்பொழுது இருக்கும் கன்ட்ரோல் வீடியோவின் நடுவில் இருக்கும். அதன் ஸ்க்ரீன்ஷாட் கீழே

WhatsApp beta for Android 2.21.22.3 பதிப்பில் இதை மாற்றி இந்த கன்ட்ரோல்களை வீடியோவின் கீழே மாற்றியுள்ளனர். இதனால் உபயோகிக்க வசதியாக இருக்கும். இந்த வசதி அனைத்து பீட்டா பதிவர்களுக்கும் இன்னும் வரவில்லை என்று WAbetainfo தளம் கூறியுள்ளது.இதன் ஸ்க்ரீன்ஷாட்

Comments 1