உறவுகள்… தொடர்கதை!

This entry is part 2 of 10 in the series வாழ்வியல்

உங்க சக்கரத்தில கம்பிகள் எல்லாம் வளையாமல் இருக்கா?

“என்ன ? உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா அப்படீங்கறமாதிரி உப்புச்சப்பு இல்லாத கேள்வி?” அப்படீன்னு சிலர் கேட்கறது என் காதில விழுகிறது.

“நாங்க என்ன ஜெர்மனியிலா இருக்கிறோம்? தினசரி சைக்கிள் ஓட்டி சக்கரத்து கம்பிஎல்லாம் வளைஞ்சு போறதுக்கு” அப்படீன்னு சிலர் யோசிக்கறது புரியறது.

சிலருக்கு சில விஷயங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும்.

அவற்றை தெளிவு படுத்தவே இந்த பதிவு .

அந்த நாளைய கதைகளில் எல்லாம் ஒரு வாசகம் வரும் “வாழ்க்கை சக்கரம் போல் சுழன்றது”

ஆமாம்! The wheel of life – வாழ்க்கை சக்கரத்தை சரியாக சுற்ற உதவி செய்வதே ஒரு வாழ்வியல் பயிற்சியாளரின் வேலை.

அந்த சக்கரத்தோட முழு முதல் கம்பி …….. உறவுகள்! ( Relationship). நாம் பூமியில விழுந்ததுலேயிருந்து மண்ணுக்குள்ள போகிற வரை ஏதோ ஒரு உறவு நம்மோடு வந்துகொண்டேதான் இருக்கிறது. ஆக, உறவுகளோடு இணக்கமாக இருப்பதில் நம்ப முதல் கம்பி வளையாம இருக்கும்.

அடுத்து வரப்போற கம்பிகள் எல்லாமே இந்த முதல் கம்பியோட strength எப்படி இருக்கு அப்படீங்கறதை பொறுத்துதான் அமையும்.

இரண்டாவது – படிப்பு, வேலை இல்லத்தரசிகளுக்கு“ Home Making” என்பதுதான் இன்றைக்கு மிகவும் challenging ஆன ஒரு வேலை.

மூன்றாவது – உங்களுக்கான நேரம் – “நான் இந்த குடும்பத்துக்காக உழைச்சு ஓடா தேஞ்சு போனேன்” இந்த ஆபீசை கட்டிண்டு மாரடிச்சேனே! என்ன பிரயோஜனம்” தேவையில்லாத வார்த்தைகள். இதையே சொல்லிண்டு இருந்தாக்க அந்த கம்பி சீக்கிரம் வளைஞ்சு போயிடும். உங்கள் தனிப்பட்ட ரசனை, விருப்பங்கள், நண்பர்கள் இவற்றிற்கான நேரம் நிச்சயம் ஒதுக்கப்பட வேண்டும். It is the quality time you should spend anywhere. .

நான்காவது – ஆன்மீகத்தில் பற்று, அதில் ஈடுபாடு – இன்றைக்கு மிகவும் strong ஆக இருப்பது இந்த கம்பி தான் என நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு சமீபத்திய புள்ளி விபரப்படி மக்கள் தொகையில் ஐந்துபேருக்கு ஒருவர் ஜோசியர் மற்றும் ஆன்மீகவாதி.

ஐந்தாவது – உங்கள் உடல் நலம் – மேலே இருக்கும் நான்கு கம்பிகளும் சரியாக இருந்தால் இந்த கம்பியில் ஒன்றும் பெரிய பிரச்சனை வராது. ஆனால் இன்று பொங்கி வழியும் corporate hospitals ஐயும் diagnostic centres ஐயும், டாக்டர்களுக்கு வெளிநாட்டு பயணத்திற்கு டிக்கெட்டுடன் காத்திருக்கும் medical representatives ஐயும் பார்க்கும் பொழுது இதுதான் மிகப்பெரிய பிரச்சனை என்று தோன்றுகிறது.

ஆறாவது – செல்வம் – சொத்து – நீங்கள் எவ்வளவு சொத்து வைத்திருகிறீர்கள் என்பதை விட மாதந்தோறும் உங்கள் கையை விட்டு போகும் EMI மற்றும் பள்ளி, கல்லூரி செலவுகள் உங்கள் கட்டுக்குள் இருக்கிறதா? படுத்தா நிம்மதியா தூக்கம் வருதா?

என்ன? ஆண்டவன் கட்டளை சிவாஜி கணேசன் போல “ஆறு மனமே ஆறு! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!” என பாட தோன்றுகிறதா?

ஆமாம்! பின்னே! மனசுதானே எல்லாவற்றிற்கும் காரணம்!

அதுதான் சில சமயங்களிலே எல்லாத்தையும் தப்பாவே பார்க்குது! ( Negative Thinking)
அதுதானே பத்துவருஷத்துக்கு முன்னாடி நடந்ததுதான் இப்போவும் நடக்கும் அப்படீன்னு பயப்படுது! ( Past is not future)

அதுதான் நினைக்குது “ஐயோ! நான் செய்யறது சாதாரண அட்மின் வேலை ! அவ பெரிய ஐடி கம்பனியில இல்ல வேல பாக்குறா!” ( low self-esteem)

இப்போ புரியுதா மனசு படுத்தற பாடு? அறிவு சரி அப்படீன்னு ஒத்துக்கற விஷயத்தை கூட மனசு அப்படியே அமுக்கிடும்.

இனிமே நான் சக்கரத்தோட ஒவ்வொரு கம்பிலேயும் இருக்கிற நெளிவுகளை பற்றிபேசி சரிப்படுதலாம்தானே?

ஜெயா ரங்கராஜன்
மன நல ஆலோசகர் மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர்.

Series Navigation<< மனதிற்கு சொல்லி கொடுங்க!தயங்காம சொல்லுங்க! >>

About Author