அடுத்தவங்களை விமர்சிக்காதீங்க

அடுத்தவங்களை விமர்சிக்காதீங்க!

This entry is part 9 of 10 in the series வாழ்வியல்

வாழ்க்கையிலே ஒரு நிலையிலே வெற்றியடைஞ்சவங்க நிறைய பேர் நினைப்பாங்க”நாம் இப்படியே இருந்தா வெற்றி எப்பவும் நம்ப பக்கம்தான்” அப்படீன்னு.அந்த வெற்றி கொடுக்கற  வேகத்தில சில வேலைகளை செய்வாங்க.  அது அவங்க அறியாமலேயே அவங்களை கிழே இறக்கிடும். அப்படி இருக்கிறவங்க மேலும் அதலபாதாளத்துக்கு போகாமல் இருக்க மாற்றிக்கொள்ள வேண்டிய பழக்க வழக்கங்களை பற்றி பேசுகிறார் –

Mr. Marshall Goldsmith, Corporate America’s Pre-eminent Coach – in his Book

“What Got You Here

Won’t Get You There”

உன்னை இந்த கட்டத்திற்க்கு கொண்டுவந்த வெற்றி நிச்சயம் மேலே கொண்டு போகாது, உன் பழக்கவழக்கங்களை நீ மாற்றிக்கொள்ளும் வரை!

அவர் முதலில் மாற்றிக் கொள்ள சொல்லும்  பழக்கம் – Winning Too Much ” நான்தான் ஜெயிச்சுட்டேனே” .அது என்ன செய்ய வைக்கிறது? அடுத்தவங்களை, சக ஊழியர்களை அவமானப் படுத்துகிறது, எப்பவும் நான்தான் ஜெயிக்கணும் அப்படீங்கற வெறியை அதிகமாக்குகிறது.

இரண்டாவது மாற்ற வேண்டிய பழக்கம் – Adding Too Much Value – திருவிளையாடல் படத்தில் தருமி சிவாஜியை பார்த்து கேட்பாரே ” இங்கு நீர்தான் எல்லாமோ?” என்று.  அது போல நான்தான் எல்லாம் என்ற மனப்பான்மை.

கீழே வேலை பார்க்கும் employeesக்கு அவரைப்பற்றி என்ன மதிப்பு இருக்கும்?

மூன்றாவது –  Passing Judgement – சாதாரணமாக நண்பர்கள் பேசிக்கொள்ளும்போது நடுவில் கருத்து சொல்லலாம் .  அதில் தவறில்லை.  ஆனால் ஒரு CEO, Top Management Officials ஐ கூப்பிட்டு ஒரு problem க்கு solution கேட்கும் போது, முதல் இருவர் கருத்துக்களுக்கும் இடையில் புகுந்து “great” “possible” என்றுசொல்லிவிட்டு மூன்றாமவர் சொல்லிய solution க்கு ஒரு reaction ம் இல்லை, அதை மற்ற அதிகாரிகளும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அந்தமூன்றாமவர் அடுத்த meeting இல் வாயே திறக்க மாட்டார்.  ஒரு கூட்டத்தில் விமரிசிக்கப்படுவது, அல்லது ஓர் அலட்சிய பார்வை பார்ப்பது  எந்த employeeக்கும் மனதிற்க்கு உகந்த விஷயமல்ல.

நாலாவது  – அடுத்தவர்களை கீழேதள்ளி மிதிப்பது போல விமரிசிப்பது -Making Destructive Comments.

நம்ப தினப்படி வாழ்க்கையிலே வாயிலேருந்து வர வார்த்தைகள் எல்லாமே அடுத்தவரை நசுக்குவது போல இருந்தால் அது வீடோ,  வெளியோ தானா சேர்ந்த கூட்டமெல்லாம் சோர்ந்த கூட்டமாகி காணாமல் போய் விடும்.

Mr. Marshall அவர் coaching செய்த company employees இடம் பேசியபோது அவர்கள் மேலதிகாரியைப் பற்றி கேட்கும் வேளையில் (360 Degree feedback)  – ” அவர்  திறமைசாலியாக இருக்கலாம், company profit ஐ அதிகரிக்க செய்பவராக இருக்கலாம்.  ஆனால் ஒரு SUVயின் அடியில் மிதிபடும் கூழாங்கற்களாக எங்களை நடத்துவதை இனியும் நாங்கள் பொறுக்க முடியாது” என்று பதிலளித்திருக்கிறார்கள்.

இப்படி employees feedback கொடுத்தால் அந்த boss ஆல் அடுத்த கட்டத்திற்க்கு மேலே போக முடியுமா எனன?

வாழ்க்கையும் அப்படித்தான்.  சொந்தபந்தங்களை, நட்புக் கூட்டத்தை கூழாங்கற்களாக நினைத்து மிதித்தால் … காணாமல் போய்விடுவார்கள்.

Series Navigation<< சுய கட்டுப்பாடு – நிச்சயம் தேவை!அடுத்தவங்க என்ன நினைப்பாங்க? >>

About Author

3 Replies to “அடுத்தவங்களை விமர்சிக்காதீங்க!”

  1. நல்ல கட்டுரை.  பயனுள்ளது.

    //திருவிளையாடல் படத்தில் தருமி சிவாஜியை பார்த்து கேட்பாரே ” இங்கு நீர்தான் எல்லாமோ?” என்று.  அது போல நான்தான் எல்லாம் என்ற மனப்பான்மை.//

    சிவாஜியைப் பார்த்து அல்ல, ஏ பி நாகராஜனைப் (நக்கீரர்) பார்த்து!

  2. கருத்துக்கள் கொஞ்சம் காரமாக இருக்கின்றன. ஒரு தலைவரை மனதில் நிறுத்தி அறிவுரை சொன்ன மாதிரி இருக்கிறது. பாராட்டுகள்.

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்.
    Jayakumar

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.