வாழ்க்கைய பத்தின உங்க Attitude, Approach அணுகுமுறை இவை எல்லாம் எப்படி இருக்கு? கடந்த காலத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
போன வருஷம் நான் ஒரு மிஸ்டேக் பண்ணிட்டேன், அதை பண்ணாம இருந்திருந்தா இன்னைக்கு நான் ஒரு நண்பனை இழுந்திருக்க மாட்டேன்! நான் மட்டும் அந்த படிப்பு எடுத்து இருந்தால் இன்னிக்கு வேற லெவல்ல இருந்திருப்பேன்! இப்படி எப்ப பார்த்தாலும் கடந்த காலத்தை ஒரு குற்ற உணர்ச்சியோடு பார்க்காதீர்கள். அதிலிருந்து நீங்க என்ன பாடம் கத்துக்கிட்டீங்க அப்படிங்கறதுதான் முக்கியம் .அத விட்டுட்டு யாரோ எனக்கு உதவி பண்ணாம போயிட்டாங்க, யாரும் என்ன சரியாக கைட் பண்ணல அப்படின்னு நாம்ப சோம்பேரித்தனமா போஸ்ட்போன் பண்ணின விஷயத்துக்கெல்லாம் யாரையும் குற்றம் சொல்லறத மொதல்ல நிறுத்துங்க. அதிலிருந்து என்ன கத்துக்கிட்டீங்க அப்படிங்கறதுதான் முக்கியம்.நேரத்தை வேஸ்ட் பண்ணி எதையும் தள்ளிப்போட முயற்சி பண்ண வேண்டாம்.
கடந்த காலத்தில் இருந்து வெளில வந்தா தான் எதிர்காலத்திற்காக திட்டமிட முடியும். எங்க போக போறீங்க அப்படிங்கிற ஒரு பிளானிங்வேணும். அப்பதான் எப்ப போய் சேர முடியும் அப்படின்னு ஒரு ஐடியா கிடைக்கும். அப்படி ஒரு இலக்கை அடைந்தால்தானே உங்களால வாழ்க்கையையே கொண்டாட முடியும்?
அதிர்ஷ்ட காத்து என் பக்கம் வீசுமா அப்படின்னு கேட்கக்கூடாது. முதல்ல உங்க படகை சரியான திசையில் செலுத்த உங்களுக்கு தெரியணும். காத்து எப்படி அடிக்கும்னு சொல்ல முடியாது. சாதாரண காத்து இல்ல, சூறாவளியே வந்தாக்கூட பாறையிலே மோதாம உங்க படகு ஒரே சீராக போகும்.
ஆக அணுகுமுறை ! Positive Attitude towards anything in life! இது தான் வெற்றிப்படிக்கட்டில் ஏற முக்கியமான விஷயம்.
வெற்றி என்பது தனிமனித சாத்தியமல்ல! நம் எல்லோருக்குமே எல்லோரும் தேவை.
இன்றைக்கு இளையராஜாவையும் ஏஆர் ரஹ்மானையும் உலகமே கொண்டாடுகிறது என்றால் அந்தப் பாராட்டு அந்த மொத்த இசை குழுவுக்கும் தான்! எத்தனை வயலின்! எத்தனை டிரம்ஸ்!
உங்கள் வாழ்க்கையின் இன்றைய வெற்றிக்கு காரணமானவர்கள் அத்தனை பேருக்கும் நன்றி சொல்லுங்கள்! வெற்றிக்கான சரியான அணுகுமுறையில் இது அதி முக்கியம்.
ஜெயா ரங்கராஜன்
வாழ்வியல் பயிற்சியாளர்
( Life Coach)
உற்சாகமூட்டும் வரிகள்