ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 16

This entry is part 15 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம்முந்தைய பதிவுகளை படிக்க

அர்க்யம் கொடுத்தல்

பிறகு சந்தனம் முதலியவற்றால் பூஜை செய்து புஷ்பங்களை போட்டு அத்தி அல்லது பலாச இலையால் மூடி தர்பங்களை அதன்மேல் வைப்போம். இந்த புஷ்பங்களுக்கு பதிலாக துளசி உபயோகிக்கிறார்கள். அடுத்து பூணூலை இடம் செய்து கொண்டு இதே போல பித்ருக்களுக்கு மேற்கே இருக்கிற பாத்திரத்தில் எள்ளை இறைத்து நாம் நீரை சேர்க்கிறோம். அப்போது ‘திலோஸி’ என்ற மந்திரம் பிரயோகம் ஆகும். இந்தப் பாத்திரத்தில் வைக்கப்படும் பவித்திரம் 3 தர்ப்பங்களால் ஆனது. இதே போல ‘ஷன்னோ தேவி’ என்ற மந்திரத்தை சொல்லி இன்ன கோத்திரம் இன்ன சர்மா உள்ளவர், சிராத்தத்தில் வசு ருத்ர ஆதித்ய வடிவிலுள்ள பித்ரு பிதாமஹர் ப்ரபிதாமஹர் இவர்களுக்காக ஜலத்தை க்ரஹிக்கிறேன் என்று ஜலத்தை விட்டு; மேலே எள்ளை போடுவோம். அப்போது சொல்லப்படும் என்ற மந்திரத்தின் பொருள்: ‘எள்ளே உனக்கு சோமனே ராஜா; கோஸவம் என்னும் கிரதுவில் நீ தேவர்களால் படைக்கப்பட்டாய். பண்டைய பொருட்களுடன் நீயும் மிகப்பழையதாய் ஸ்வதா என்பதாகி வா; வஸு முதலிய வடிவங்களான பித்ரு பிதாமஹ பிதாமகர்களை இந்த லோகத்தில் சந்தோஷப்படுத்தி எங்களையும் சந்தோஷப்படுத்து’.

விஷ்ணுவுக்கும் விஸ்வேதேவர் போலவே அர்க்ய ஜலம் க்ரஹிக்க வேண்டும். அதே மந்திரங்கள் சொல்லப்படும். சிலர் தனியாக க்ரஹிக்காமல் விஸ்வேதேவருக்கு க்ரஹிக்கும்போதே விஷ்ணு பெயரையும் சேர்த்துக்கொண்டு ஒரே பாத்திரத்தில் இருந்து இருவருக்கும் ஜலம் எடுத்து அர்க்கியம் கொடுப்பதாய் சம்பிரதாயம் சொல்லுகிறார்கள்.

அடுத்து இந்த மந்திரங்களுடன் வைத்து சேர்த்து வைத்த நீரை முதலில் விஸ்வேதேவருக்கும் அடுத்து பித்ருக்களுக்கும் கடைசியாக விஷ்ணுவுக்கும் அர்க்கியம் கொடுக்க வேண்டும்.

முதலில் உபவீதியாக விஸ்வேதேவர் கையில் சுத்த ஜலத்தை விட்டு பிறகு அர்க்கிய பாத்திரத்தில் உள்ள பவித்ரத்தை வைத்து மந்திரத்தை கூறி அர்க்கிய பாத்திர தீர்த்தத்தை விட்டு பின் பவித்ரத்தை அர்க்கிய பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

பித்ருக்களுக்கு சுத்தோதகம் விடும் போது முதலில் உபவீதியாகவும் பிறகு பூணூலை காட்சி ப்ராசீனா வீதியாக அணிந்து பித்ரு பவித்திரத்தை இவர் கையில் வைத்து மந்திரம் கூறி அர்க்யம் அளித்து பவித்ரத்தை பாத்திரத்தில் வைத்து விட்டு, உபவீதி ஆகி மீண்டும் பித்ரு கரத்தில் சுத்தோதகம் கொடுக்க வேண்டும். இப்படி பல இடங்களில் நடப்பதில்லை போலிருக்கிறது. இந்த மந்திரம் கூறிய அர்க்கிய ஜலம் பிரதானமானதாக அதற்கு முன்னும் பின்னும் சுத்த நீரும் அளிக்கப்படுகிறது. ‘யா திவ்யா’ என்ற மந்திரம் அர்க்கியம் கொடுப்பதில் பயனாகிறது. அர்த்தம் ‘தேவலோகத்தில் பாலுடன் உண்டானதும், ஆகாசத்தில் உண்டான வகைகளும், பூமியில் உண்டான வகைகளும் தங்க நிறமானதும் யாகத்துக்கு ஏற்றதும் ஆன அர்க்கிய ஜலம் நமக்கு க்ஷேமத்தையும் இன்பத்தையும் கொடுக்கட்டும்.

இது தேவர்களுக்கும் மக்களுக்கும் பொதுவான மந்திரம். உபவீதியாக விஷ்ணுவுக்கு விஸ்வேதேவர்களுக்கு செய்தது போலவே முதலில் சுத்த தீர்த்தம் பவித்ரத்தை கையில் வைத்து அர்க்கிய ஜலம், அதன் பிறகு சுத்த தீர்த்தம் கொடுக்க வேண்டும்.

எப்படி பூஜையில் தியானம் ஆவாஹனம் பாத்தியம் அர்க்கியம் என்று செய்கிறோமோ அது வரை இங்கேயும் உபசாரங்கள் முடிந்தன.

இப்படி பிராமணர்களுக்கு கையில் அளித்த தீர்த்தம் கீழே சிந்தும்….

Series Navigation<< ஶ்ராத்தம் – 14ஶ்ராத்தம் – 15 >>

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.