ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 18

This entry is part 18 of 44 in the series ஶ்ராத்தம்

வஸ்திரம் முதலிய உபசாரங்கள் -2

பிறகு பிராசீனா வீதியாகி வழக்கப்படி வசு ருத்ர ஆதித்ய வடிவிலான பித்ரு முதலானவர்களை அழைத்து இடுப்புக்கு வஸ்திரம், மேலே அணியும் வஸ்திரம், தரித்துக் கொள்ள பூணூல் அல்லது மூன்றாவது வஸ்திரம் என்று கூறி, கொடுப்பதாக பாவனை செய்து கந்தத்வாராம் மந்திரம் சொல்லி அலங்கரித்துக் கொள்ள ஒரு முறை சந்தனம், புஷ்பத்துக்காக துளஸி, உபசாரத்துக்காக மீண்டும் சந்தனம் (சிலர் செய்வதில்லை). தூபத்தை பாதத்திலும் தீபத்தை முகத்திலும் காட்ட வேண்டும் யாகத்தில் பயனாகும் தூரசி, யுவா ஸுவாஸா, சோமோ வா ஆகிய மந்திரங்களை பூஜைகளுக்கும் உபயோகிக்கும்படி முன்னோர் ஒரு சம்பிரதாயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

வஸ்திரம் கந்தம் புஷ்பம் தூபம் தீபம் கற்பூரம் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யும் உபசாரங்களில் நிறைய சம்பிரதாய மாறுதல்கள் உள்ளன. சிலர் பழக்கத்தில் இரண்டாம் முறை சந்தனம் கொடுப்பது பித்ருக்களுக்கு இல்லை. துளசி கொடுப்பது என்று ஸோமதேவ ஶர்மா புத்தகத்தில் இல்லை; ஆனால் அனுஷ்டிக்கப்படுகிறது. தீபத்தை கொடுத்தால் அது எல்லா பாபங்களையும் நசிக்கும். அதே சமயம் பிராம்ஹணர் சாப்பிட்டு முடிக்கும் வரை அது எரிந்து கொண்டு இருக்க வேண்டும்; நடுவில் அணைந்து விட்டால் மேற்கொண்டு அவர் சாப்பிடக் கூடாது, கர்தாவுக்கு ஆயுஸ் குறையும், சிரத்தத்தை மீண்டும் செய்ய வேண்டும் என்றெல்லாம் இருக்கிறது.அதனாலேயே விட்டுப்போயிற்று போலிருக்கிறது.

சிலர் மந்திரங்களை மட்டும் சொல்வார்கள். சிலர் சாம்பிராணி தூபம் அல்லது தீபம் கற்பூரம் போன்றவற்றை செய்வார்கள். சிலர் மந்திரங்களை மட்டும் கூறி அவற்றுக்காக அட்சதையை/ எள்ளை போடுவார்கள். சிலர் மந்திரங்களை கூறுவதில்லை. தூப தீபம் முதலான எல்லா உபசாரங்களுக்கும் என்று சொல்லி அக்‌ஷதை அல்லது எள் போடுவார்கள். எப்படி வீட்டு சம்பிரதாயம் இருக்கிறதோ, அப்படி செய்யலாம்.

அடுத்து ஹோமம் செய்ய வேண்டும். அதற்கு முன் பித்ரு ப்ராம்ஹணரிடம் அனுமதி கேட்க வேண்டும். அக்னௌ கரிஷ்யே என்று கேட்க அவர் குருஷ்வ என்பார்கள். அல்லது உத்ரியதாம், அக்னௌ ச க்ரியதாம் என்று கேட்க அவர் காமம் உத்ரியதாம், காமம் அக்நௌச க்ரியதாம் என்று பதில் கொடுப்பர். இப்படி அனுமதி இல்லாமல் மேலே ஹோமம் செய்வது சரியில்லை அல்லவா? அதற்குத்தான் போக்தாக்கள் பதில் சொல்வது முக்கியம், அதற்கு தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றோம்.

இந்த ஹோமம் செய்வது எப்படி என்று அவரவர் சூத்திரப்படி இருக்கிறது. ஆபஸ்தம்பிகளுக்கும் போதாயன சூத்ரிகளுக்கும் விரிவாக செய்யச் சொல்லியிருக்கிறது. மற்றவர்களுக்கு பிண்ட பித்ரு யக்ஞம் போல செய்யச் சொல்லி இருக்கிறது.

ரிக்வேதிகள் ஸோமாய பித்ருமதே ஸ்வதா நமஹ, அக்னயே கவ்யவாஹனாய ஸ்வதா நமஹ என்று இரண்டு ஹோமங்கள் மட்டில்.

ஸாம வேதிகள் ஸ்வாஹா ஸோமாய பித்ருமதே; ஸ்வாஹா அக்னயே கவ்யவாஹனாய என இரண்டு ஹோமங்கள் மட்டில்.

ரிக்வேதிகள் பத்னி பஹிஷ்டையாக இருந்தால் அக்னி ஸந்தானம் செய்வதில்லை. அந்த இடத்தில் பாணி ஹோமம் என்று ப்ராம்ஹணர் கையிலேயே கொடுப்பதாக இருக்கிறது. இந்த வழியை பயன்படுத்தி பத்னி இருக்கிறாளோ இல்லையோ வழக்கமாகவே பாணி ஹோமம் செய்வதாக இருக்கிறது போல.

போதாயனர்களுக்கு 28 ஹோமங்கள். ஆபஸ்தம்பிகளுக்கு 7.

Series Navigation<< ஶ்ராத்தம் – 19ஶ்ராத்தம் – 17 >>

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.