ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 37

This entry is part 37 of 44 in the series ஶ்ராத்தம்

அடுத்ததாக பிண்ட பிரதானம். இதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு திரும்பி இடது கால் முட்டி விட்டு தெற்கு நுனியாக இரண்டு வரிசை கிழக்கு மேற்காக தர்ப்பங்களை பரப்ப வேண்டும். முன்னே ஹோமம் முடிந்து மிகுந்தது சிறிது பிராமணர்களுக்கு போட்டுவிட்டு மீதி வைத்திருக்கும் அன்னத்தில் ஆறு பிண்டங்களை பிடிக்க வேண்டும்.

மார்ஜயந்தாம் மம பிதரஹ, மார்ஜயந்தாம் மம பிதாமஹஹ, மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹஹ என்று சொல்லி கிழக்கு தர்ப்பங்களில் வடக்கில் ஆரம்பித்து எள்ளும் நீரும் இறைக்க வேண்டும். பின் மேற்கே அதே போல 3 இடங்களில் மார்ஜயந்தாம் மம மாதரஹ, மார்ஜயந்தாம் மம பிதாமஹ்யஹ, மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹ்யஹ என்று சொல்லி தர்ப்பங்களில் எள்ளும் நீரும் இறைக்க வேண்டும்.(இதற்கெல்லாம் ப்ராசீனாவீதி, பித்ரு தீர்த்தம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை அல்லவா? )

ஒவ்வொரு பிண்டமாய் எடுத்து ‘ஏதத்தேதத’ என்று சொல்லி ஓவ்வொரு பித்ரு பெயரையும் சொல்லி கையை மறித்து வடக்கிலிருந்து தெற்காக தந்தை வர்க்கத்துக்கு முதலிலும் பிறகு தாய் வர்க்கத்திற்கு இரண்டாவதாகவும் பிண்டங்களை வைக்க வேண்டும். ஒவ்வொரு பிண்டத்தையும் வைத்தபின் அதற்கு மேற்கே சிறிது உதிரி அன்னத்தை வைக்க வேண்டும் இதை வைக்கும் போது ‘யே சத்வாமனு’ என்று சொல்ல வேண்டும். (அதாவது ‘யே ச த்வாம் அனு உங்களை சார்ந்தவர்களுக்கு என்று பொருள்).

பிறகு மந்திரங்கள் கூறி உபஸ்தானம் செய்ய வேண்டும். ‘பித்ருக்களே, உங்களை அனுசரித்து இங்கே வந்த மற்ற பித்ருக்களும் எங்களை நாடிவந்து ஹவிஸை வேண்டுகின்றவர்களும் அதேபோல மாத்ரு வர்க்கத்தை சேர்ந்தவர்களும் இந்த அன்ன பிண்டத்தை பெற வேண்டும். இரண்டு வர்க்கத்தினரும் திருப்தி அடைய வேண்டும்’ என்று கூறுவதுடன் பல முறை ‘திருப்தி அடையுங்கள்’ என்று வேண்டுகிறோம்.

இப்படியாக சிராத்தம் செய்வது செய்யப்பட்டவருக்கு மட்டும் இல்லாமல் அவரை சார்ந்த பலருக்கும் பயனாகிறது என்று இந்த மந்திரம் காட்டுகிறது. அர்க்கியத்துக்கு சேர்த்த தீர்த்தங்களை ஒரே பாத்திரத்தில் ஊற்றி உள்ளங்கையால் மூடி எல்லா பிண்டங்களையும் மூன்று முறை அப்பிரதட்சணமாக பரிஷேசனம் செய்ய வேண்டும். ஹோமத்தில் உபயோகித்த சின்ன பெரிய இலைகள் நெய் பாத்திரம் மற்ற பாத்திரங்கள் ஆகிய அனைத்தையும் தெற்கு பக்கம் கவிழ்த்து வைத்து ‘திருப்யத திருப்யத திருப்யத’ என்று ஒன்பது முறை கூறி இலைகள் முதலானவற்றை இரண்டிரண்டாக பாத்திரங்களை நிமிர்த்தி வடக்கு பக்கம் வைக்க வேண்டும். பிறகு பிண்ட பித்ரு தேவதைகளுக்கு ஸ்ராத்தத்திற்காக செய்த வடை அதிரசம் இவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். தாம்பூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 36ஶ்ராத்தம் – 38 >>

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.