ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 43 ரிக் வேதீய ஶ்ராத்தம்

This entry is part 42 of 44 in the series ஶ்ராத்தம்

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ரிக் வேதம் ஆஸ்வலாயனம் : அக்னி சந்தானம் ஔபாசனம் உண்டு. க்ருசரம் சங்கல்பம் ஸ்நானம் எல்லாம் ஒன்றே. அக்னி ப்ரதிஷ்டை செய்தே பாத ப்ரக்‌ஷாளனம். (போதாயனத்திலும் அப்படியே). அக்னி முகம் என்று ஒன்று கிடையாது. நேராக மந்திரம் இல்லாமல் இத்மம் வைப்பதே. பரிஸ்தரணம் போட்டு பரிசேஷணம் செய்து பாத்ர சாதனம் செய்து அதி ப்ரணீதாக்னியில் இத்மம் வைக்க வேண்டும்.

உபசாரங்கள் எல்லாம் முடிந்து பிரதான ஹோமத்துக்குத்தான் இங்கே வேலை. பிண்ட பித்ரு யக்ஞம் போல. பாத ப்ரக்‌ஷாளனம் முதலியவற்றில் வித்தியாசம் இல்லை. இப்போது ஸ்தல சுத்தி செய்ய வேண்டும்.

அர்க்ய க்ரஹணத்தில் வித்தியாசம் உள்ளது. விஶ்வேதேவருக்கு இரண்டு பாத்திரங்கள். பித்ருக்களுக்கு 3 என 5 பாத்திரங்களில் தனித்தனியாக க்ரஹணம். விஷ்ணுவுக்கானதை விஶ்வேதேவருடன் சேர்த்து விடுவர். (மந்திரத்திலேயே விஷ்ணுச் ச என்று சொல்லி) தனியாக எடுப்பதும் உண்டு. எவ்வளவு முறை எடுத்தோமோ அதே முறை அர்க்யம் தர வேண்டும். அர்க்ய தானம் ஆன பின் பித்ருக்களின் அர்க்ய பத்திரங்களில் உள்ள ஜலத்தை ஒன்றாக சேர்த்து விடலாம். பிதாமஹர் ப்ரபிதாமஹர் பாத்திரத்தில் உள்ளதை பித்ரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். ப்ரபிதாமஹர் பாத்திரத்தை பித்ரு பாத்திரம் மீது கவிழ்க்க வேண்டும். பிதாமஹருடையதை பக்கத்தில் வைக்க வேண்டும். விஸ்வேதேவர் பாத்திரங்களில் உள்ளது அப்படியே இருக்க வேண்டும்.

உபசாரத்தில் கந்தாதி உபசாரம். அதாவது சந்தனம் கொடுப்பது முதலில். (ஸாம வேதத்திலும் அப்படியே) பின் பூணூல், தூப தீபம்; அடுத்து வஸ்திரம்.

எல்லாரும் எல்லா உபசாரங்களையும் முழுக்க செய்ய வேண்டும் என்றாலும் ஒவ்வொரு வேத சாகைக்கும் ஒரு உபசாரத்தை விசேஷமாக சொல்கிறார்கள். ரிக் வேதிகளுக்கு உப்சாரங்கள். ஆகவே தூப தீபங்கள் முதலியன ப்ரத்யக்‌ஷமாக செய்ய வேண்டும்.

சாப்பிட்டு முடியும் வரையாவது தீபம் அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காட்டிய தீபத்தை பூஜை அறையில் கொண்டு வைக்கலாம். பெரிய விளக்குடன் சேர்க்கவும் செய்யலாம்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 41ஶ்ராத்தம் – 44 ரிக் வேதீய ஶ்ராத்தம் – ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள் >>

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.