பொதுவாக மொபைல் உபயோகிக்கும் பொழுது ஸ்க்ரீன் ஷாட் எடுக்க, ஆன்ட்ராய்டில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்க்ரீன் ஷாட் டூல் தான் உபயோகிப்போம். பிரவுசரில் ஒரு வெப்சைட் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கவும் அதுதான் வழி. இப்பொழுது அதிகமானோர் பயன்படுத்தும் கூகிள் க்ரோமில் புதிதாய் ப்ரவுஸரிலே ஸ்க்ரீன்ஷாட் எடுக்க Built-in Screenshot tool கொடுத்துள்ளனர்.
எப்படி உபயோகிப்பது ?
முதலில் கூகிள் ப்ளே ஸ்டோர் சென்று அப்டேட் இருந்தால் அப்டேட் செய்து கொள்ளுங்கள். அடுத்து கூகிள் க்ரோம் ஓபன் செய்து எந்த வெப்சைட் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க வேண்டுமோ அதற்கு செல்லவும். இப்பொழுது வலது மேல் பக்க மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை டச் செய்யவும். மெனுவில் “Share” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
இப்பொழுது கீழே இரண்டு வரிசையில் ஆப்ஷன்கள் வரும். முதல் வரிசையில் பேஸ்புக், ட்விட்டர் இவற்றை காட்டும். அதற்கு கீழே “Screenshot” என்ற பெயரில் இந்த Built-in Screenshot tool இருக்கும். அதை க்ளிக் செய்தவுடன் நீங்கள் ஓபன் செய்திருக்கும் வெப் சைட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும்.
இந்த டூலில் மற்றொரு வசதி. நீங்கள் க்ரோம் பிரவுசரை விட்டு வெளியே செல்லாமலே எடிட் செய்துகொள்ள முடியும். பின் அங்கிருந்து அப்படியே மற்ற செயலிகளில் பகிர்ந்து கொள்ள முடியும்.



